Latest News :

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தொடர்ந்து உதவி செய்யும் வரலட்சுமி!
Friday July-10 2020

தமிழகத்தில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அத்தியாவாசியப் பொருட்களை நடிகை வரலட்சுமி வழங்கி வருகிறார். பீகார், மேற்கு வங்காளம், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குக் கிளம்புவதற்கு முன்பாக நடிகை வரலட்சுமி சரத்குமார் தான் தொடங்கிய சமுக சேவை அமைப்பான சேவ் சக்தி (Save Shakti) பவுண்டேஷன் சார்பாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கே சென்று  அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கி வந்தார்.

 

அதே போல் தற்போது மேற்கு வங்காளத்தை சேர்ந்த 2000 புலம்பெயர் தொழிலாளர்கள் இன்று சென்னையிலிருந்து அவர்களது சொந்த ஊருக்கு கிளம்பினர். அவர்களுக்குத் தேவையான உணவு, தண்ணீர், முக கவசம் மற்றும் மருத்துவ பொருட்கள் என அவர்கள் ஊர் சென்று சேரும் வரை அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்களை இன்று நடிகை வரலட்சுமி சரத்குமார் வழங்கினார்.

 

Varalakshmi

 

நடிகை வரலட்சுமி சரத்குமார் அவர்களின் தாய் சாயா தேவி மற்றும் சேவ் சக்தி உறுப்பினர்களுடன் துரிதமாக செயல்பட்டு இந்த பொருட்களை அனைவருக்கும் வழங்க உதவி செய்தனர். இந்த உதவிகள் நல்லபடியாக நடைபெற உதவியாக இருந்த சென்னை காவல் துறை, சென்னை மாநகராட்சி, இந்திய ரயில்வே துறை, திரு.கவுதம் சந்தர் (Sankalp Beautiful World), மற்றும் சேவ் சக்தி உறுப்பினர்களுக்கு தனது இதயம் கனிந்த நன்றியை நடிகை வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துக் கொண்டார்.

 

Varalakshmi Sarathkumar

 

மேலும் சேவ் சக்தி (Save Shakti) பவுண்டேஷன் சார்பாக பசியால் வாடும் நாய், மாடு உள்ளிட்ட வாயில்லா ஜீவன்களுக்கும் வரலட்சுமி சரத்குமார் அவரது தாய் சாயா தேவி உணவளித்தும், மருத்துவ உதவிகளையும் செய்தும் வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

6767

Kids special animation film 'kiki & koko' teaser launch event
Saturday December-27 2025

India's first kid's animation film, 'Kiki & Koko' directed by P.Narayanan and presented by Inika Productions, had its teaser launch event on Dec 26, 2025...

இந்த படம் எங்களுக்கு பெருமை - ‘கிகி & கொகொ’ படக்குழு உற்சாகம்
Saturday December-27 2025

இனிகா புரொடக்‌ஷன்ஸ் வழங்கும் குழந்தைகளுக்கான இந்தியாவின் முதல் அனிமேஷன் படம் ‘கிகி & கொகொ’...

வைரலான ஸ்ருதிஹாசன் பாடல்!
Saturday December-27 2025

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ருதிஹாசன், நடிப்புடன் மட்டுமல்லாமல் தன் இசைத் திறமையாலும் ரசிகர்களின் மனதை வென்று வருகிறார்...

Recent Gallery