வனிதாவின் மூன்றாவது திருமணமும், அதனை தொடர்ந்து எழுந்த சர்ச்சைகளும் தான் தற்போதைய கோலிவுட்டின் ஹாட் டாப்பிக்காக இருக்கிறது. வனிதா மட்டும் இன்றி அவர் பெயரை பயன்படுத்தி சிலர் யுடியுப் சேனலில் சர்ச்சையாக பேசி வருவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, தன்னை பற்றி பலர் விமர்சித்து வருகிறார்கள், அவர்களின் விமர்சனங்களால் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கும் நான், வேறு விதமான முடிவு எடுத்தால், அவர்கள் கொலைகாரர்களாவார்கள், என்று வனிதா திடீர் எச்சரிக்கை விடுடுத்தது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், வனிதாவின் முன்னாள் காதலரான நடன இயக்குநர் ராபர்ட் சமீபத்திய பேட்டி ஒன்றில், வனிதா குறித்து சர்ச்சையான கருத்து தெரிவித்திருப்பது புது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வனிதாவுடன் இணைந்து ‘எம்.ஜி.ஆர் சிவாஜி ரஜினி கமல்’ என்ற படத்தை தயாரித்து இயக்கி ஹீரோவாக நடித்த ராபர்ட், அப்படத்தை வனிதா தயாரித்து தன்னை ஹீரோவாக்கியதால் தான், அவரது பெயரை தனது கையில் பச்சை குத்திக் கொண்டேன். ஆனால், பச்சை குத்தி ஒரு மாதம் ஆவதற்குள் அவருக்கும் தனக்கும் பல பிரச்சினைகள் வந்ததால், அந்த பெயரை அழித்து விட்டேன், என்றார்.
மேலும், வனிதா குறித்து யுடியுப் சேனலில் பேசினால் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. அதற்காகவே பலர் பேசுகிறார்கள், என்றவர் தானும் ஒரு யுடியுப் சேனல் தொடங்க இருப்பதாகவும், அதில் நடனம் பற்றிய வீடியோக்களை வெளியிட இருப்பதாகவும் கூறினார்.

அப்போது, பேட்டி எடுப்பவர், “வனிதா பற்றி வீடியோ போடுங்கள் சீக்கிரம் உங்கள் யுடியுப் சேனல் பிரபலமாகிவிடும்” என்று கூற, அதற்கு ராபர்ட், “வேண்டவே வேண்டாம். புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது. அதுபோல தான் நான், நேர்மையான வீடியோ மட்டுமே போடுவேன். அதை மூன்று பேர் பார்த்தாலும் பரவாயில்லை, வனிதா பெயரை பயன்படுத்த மாட்டேன்” என்று பதில் அளித்தார்.
புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது, என்று ராபர்ட் கூறி வனிதாவை மரண கலாய் கலாய்த்திருப்பதாக நெட்டிசன்கள் விவாதம் செய்ய, ராபர்டின் இந்த வீடியோவுக்கு வனிதா எப்படிப்பட்ட பதிலடி கொடுக்க போகிறார், என்பதும் பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...