நடிகை வனிதா விஜயகுமாரின் மூன்றாவது திருமணம் குறித்து விமர்சித்த நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், வனிதா விஷயத்தில் தனது டிவி நிகழ்ச்சி பாணியில் பஞ்சாயத்து செய்யவும் முயற்சித்தார். இதனால், கடுப்பான வனிதா, வாய்ப்பு கிடைத்ததும், லட்சுமி ராமகிருஷ்ணனை நேரடி நிகழ்ச்சி ஒன்றில் வச்சி செய்ய, லட்சுமி தடுமாறி போனார்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு லட்சுமி ராமகிருஷ்ணனின் ஆதரவாளர்கள் வனிதாவை கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், வனிதாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய லட்சுமி ராமகிருஷ்ணன் ரூ.1.25 கோடி இழப்பீடும் கேட்டார். இது குறித்து அவர் ஊடகங்களில் தெரிவிக்காத நிலையில், வனிதா இதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டதோடு, அவரது வக்கீல் நோட்டீஸையும் வெளியிட்டார்.
சமூக போராளியான லட்சுமி ராமகிருஷ்ணன், தன்னிடம் ரூ.1.25 கோடி பணம் கேட்டு மிரட்டுவதை பாருங்கள், என்று பதிவிட்ட வனிதா, அவரது வக்கில் நோட்டீஸை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன், என்றும் அறிவித்தார்.
இந்த நிலையில், லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு புது ஆப்பு வைக்கும் நடவடிக்கையில் இறங்கியிருக்கும் வனிதா, அவர் குடும்ப பிரச்சினைகளுக்கு பஞ்சாயத்து செய்யும் டிவி நிகழ்ச்சிக்கே முற்றுப்புள்ளி வைக்கப் போகிறாராம். ஆம், லட்சுமி ராமகிருஷ்ணன் சட்டம் படிக்காமல், நீதிபதி போல அடுத்த வீட்டு பிரச்சினைக்கு தீர்ப்பு வழங்க கூடாது, என்பதை வலியுறுத்தி வனிதா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போகிறாராம்.
ஏற்கனவே லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தி வந்த சொல்வதெல்லாம் நிகழ்ச்சி, ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தி வரும் மற்றொரு நிகழ்ச்சிக்கும் அதே நிலை ஏற்பட்டுள்ளதால், லட்சுமி ராமகிருஷ்ணன் உள்ளதையும் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக பேச்சு அடிபடுகிறது.
'இறுதிப் பக்கம்' திரைப்படத்தைத் தயாரித்த இன்சாம்னியாக்ஸ் ட்ரீம் கிரியேஷன்ஸ் எல்...
தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...
திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனர் பி...