‘கோசுலோ’ என்ற திரைப்படத்தின் பஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி வைரலானது. காரணம், அந்த போஸ்டரில் இடம் பெற்றிருந்த கதாப்பாத்திரத்தின் கெட்டப் மற்றும் படத்தின் தலைப்பு. சந்திரகாந்த் என்பவர் இயக்கியுள்ள இப்படத்தை பி.ஆர்.ராஜேசகர் தயாரித்திருப்பதோடு, அவரே கதை, திரைக்கதையும் எழுதியுள்ளார்.
கோபால் இசையமைக்கும் இப்படத்திற்கு ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் என்று மூன்று மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தின் தமிழ் பதிப்பை ஆக்ஷன் ரியாக்ஷன் நிறுவனம் சார்பில் ஜெனீஷ் வெளியிடுகிறார்.
பல தரமான சிறு முதலீட்டு திரைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வரும் ஜெனீஷ், ‘கோசுலோ’ படம் குறித்து கூறுகையில், “கதையின் தன்மை கருதி தமிழ் பதிப்புக்கு கோசுலோ என்கிற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதுவரை வெளியான மும்மொழி படங்கள் எல்லாமே ஒரே கதை, ஒரே நடிகர் பட்டாளம் என்ற வகையிலோ, அல்லது ஒரே கதை, அந்தந்த மொழிக்கு ஏற்ற நடிகர்கள் என்கிற வகையிலோ தான் வெளியாகி இருக்கின்றன. இன்னும் சொல்லப் போனால் கதை முழுவதும் ஒரே மாதிரி இருந்தால் கூட, மொழிக்கு ஏற்றபடி க்ளைமாக்ஸ் மட்டும் மாற்றப்பட்ட நிகழ்வுகளும் உண்டு.
ஆனால் இந்திய சினிமாவில் முதல் முறையாக ஒரு புதிய முயற்சியாக மூன்று மொழிகளுக்கும் ஒப்பனிங், க்ளைமாக்ஸ் ஆகியவை மட்டும் ஒரே மாதிரியாகவும், உள்ளே நடக்கும் கதை வேறு மாதிரியாகவும் உருவாக்கப்பட்டுள்ளது தான் இந்தப் படத்தின் ஹைலைட்டான அம்சம்.

இந்தப்படம் சைகாலஜிகல் த்ரில்லர் ஆக உருவாகியுள்ளது. ஒரு மலை பிரதேசத்திற்கு ஒரு வயதான தம்பதி, ஒரு நடுத்தர வயது ஜோடி மற்றும் ஒரு இளைஞன் ஆகியோர் வருகின்றனர். அங்கே அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை, அதை அவர்கள் எவ்வாறு சமாளிக்கின்றனர் என்பது தான் படத்தின் கதை.
படத்தை பார்க்கும்போது எதற்காக ’கோசுலோ’ என்கிற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என ரசிகர்கள் தெரிந்து கொள்வார்கள். அதற்கு முன்னதாக இந்தப்படத்திற்கு ’கோசுலோ’ என ஏன் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பதை யூகித்து அதற்கான சரியான காரணத்தை எங்களுக்கு எழுதி அனுப்பும் 25 நபர்களுக்கு அவர்களுடையே வீடு தேடி பரிசு வரும் புதிய போட்டி ஒன்றையும் நடத்த உள்ளோம்.” என்றார்.
இந்த படத்தில் நடிகை லட்சுமி, சுதாராணி, சாது கோகிலா, அச்சுதா குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் இதில் சுதாராணி பல வருடங்களுக்கு முன் தமிழில் ’வசந்தகால பறவை’, ’தங்கக்கிளி’ ஆகிய படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கன்னட திரையுலகில் தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகர் என பன்முகத் திறமைகளைக் கொண்டவரும் சமூக ஆர்வலருமான சுரேஷ் ஹெப்லிகர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இப்படத்தை தொடர்ந்து ஆக்ஷன் ரியாக்ஷன் நிறுவனம், யாஷிகா ஆனந்த் நடிக்கும் ‘கிருஷ்ணா அர்ஜூனா யூகம்’, பல்வேறு சர்வதேச விருதுகளை பெற்றிருக்கும் ‘ஞானச்செருக்கு’ உள்ளிட்ட படங்களை அடுத்தடுத்து வெளியிட உள்ளது.
பிரபல நிறுவனமான Behindwoods Productions தயாரிக்கும் ‘மூன்வாக்’ (Moonwalk) திரைப்படத்தின் 14 கேரக்டர் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது...
யாஷ் நடிக்கும் மிகப்பிரம்மாண்ட படைப்பான ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, மார்ச் 19, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படக்குழு அதன் இருண்ட மர்மமான உலகத்தின் இன்னொரு முக்கிய அத்தியாயத்தை ரசிகர்களுக்கு வெளிப்படுத்தியுள்ளது...
இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவரும், அவரது உறவினருமான மதிமாறன் புகழேந்தி ’செல்ஃபி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார்...