அஜித்தீன் ‘ஜீ’ படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் சங்கர். அப்படத்தை தொடர்ந்து சூர்யாவின் ‘ஆறு’, சிம்புவின் ‘வல்லவன்’ என தொடர்ந்து பல படங்களில் நடித்து, கவனம் பெற்றவர், பிறகு வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்தார்.
கருணாஸ் ஹீரோவாக நடித்த ‘அம்பாசமுத்திரம் அம்பானி’ படத்தில் காமெடி நடிகராக மட்டும் இன்றி குணச்சித்திர வேடத்திலும் நடித்ததால், அப்படத்திற்கு பிறகு சங்கருடன் ’அம்பானி’ என்ற பட்டம் ஒட்டிக் கொண்டது. அதில் இருந்து அம்பானி சங்கர் என்று கோலிவுட்டில் அறியப்படுபவர், ஜீ படத்தில் சிறுவனாக நடித்தாலும், அப்போதே அவருக்கு 17 வயதாம்.
வயது அதிகமாக இருந்தாலும், பார்ப்பதற்கு சிறுவனைப் போல் இருந்ததால் அம்பானி சங்கருக்கு, சிறுவன் கதாப்பாத்திரங்களில் நடிக்க அதிகமாக வாய்ப்பு கிடைத்ததால் நிறைய படங்களில் நடித்து வந்தார். தற்போது அவருக்கு தாடி மற்றும் மீசை வளர்ந்திருக்கிறது. இதுவே அவரது சினிமா வாழ்க்கைக்கு பெரிய சிக்கலையும் ஏற்படுத்தியிருக்கிறது. ஆம், தாடி மற்றும் மீசை வளர்ந்திருப்பதால் அவருக்கு சிறுவன் வேடங்கள் கிடைப்பதில்லையாம். அதே சமயம், ஹீரோவுக்கு நண்பராக நடிக்கும் வேடம் என்றால், அவர் உயரம் குறைவாக இருப்பதால், பிரேம் வைக்க முடியவில்லை, என்று அந்த வேடமும் அவருக்கு கொடுக்கப்படுவதில்லையாம்.
இதனால், சரியான நடிப்பு வாய்ப்பு கிடைக்காமல் கஷ்ட்டப்பட்டு வரும் அம்பானி சங்கர், தற்போது தனது கவனத்தை திரைக்கதை எழுதுவது, இயக்கம் என்று திருப்பியுள்ளார். சினிமாவில் வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்த போது, பாக்யராஜின் பாக்யா பத்திரிகையில் வேலை செய்தவர், பாக்யராஜுடன் பணியாற்றிய அனுபவம் மற்றும் தம்பி ராமையா இயக்கிய ‘மணியார் குடும்பம்’ படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய அனுபவத்தை வைத்து சில திரைக்கதைகளை எழுதி வைத்திருப்பதோடு, தனது நண்பர்களுடன் சேர்ந்து குறும்படங்கள் மற்றும் நகைச்சுவை தொடர்களை இயக்கி அதை யுடியுபில் வெளியிட்டு வருகிறார்.
தனது உருவ தோற்றத்தினால் நடிகராக பல படங்களில் வாய்ப்பு கிடைத்து வந்த நிலையில், அதே உருவத்தால் தற்போது வாய்ப்புகள் குறைந்தது தனக்கு வருத்தமாக இருந்தாலும், நேரம் கைக்கூடினால் நடிப்பதை தாண்டி வேறு பரிணாமத்தில் தன்னை ரசிகர்கள் விரைவில் பார்க்கலாம், என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் அம்பானி சங்கர் தெரிவித்துள்ளார்.
அன்னை வேளாங்கண்ணி ஸ்டுடியோஸ் சார்பில் TS...
புட் ஸ்டெப்ஸ் புரொடக்ஷன்ஸ் (Foot Steps Production) தயாரிப்பில், கோதாரி மெட்ராஸ் இண்டர்நேஷ்னல் லிமிடெட் (Kothari Madras International Limited) இணைந்து வழங்க, இயக்குநர் எஸ்...
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், சிலம்பரசன் டி...