கொரோனா வைரஸ் பரவல் முன் எசசரிக்கைக்காக அரசு அமல்படுத்தி வரும் தொடர் ஊரடங்கினால் மக்கள் பலர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்த மிகவும் கஷ்ட்டப்பட்டு வருகிறார்கள். சாதாரண மக்கள் மட்டும் இன்றி மக்களிடம் பிரபலமாக இருக்கும் சில திரை நட்சத்திரங்களும் இதே நிலையில் இருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
முன்னணி நடிகர், நடிகைகளை தவிர்த்து சிறு சிறு வேடங்களில் நடித்து வரும் துணை நடிகர், நடிகைகள் மற்றும் கதாப்பாத்திர நடிகர்கள் படப்பிடிப்பு இல்லாத காரணத்தால் மிகப்பெரிய பாதிப்பில் இருக்கிறார்கள். இதனால், சில தற்கொலை சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.
மேலும், சில நடிகர்கள் இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையை சமாளிப்பதற்காக வேறு வழிகளில் வருமான ஈட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். குறிப்பாக வருமானம் இன்றி தவிக்கும் சில நடிகைகள் வருமானத்திற்காக தாங்கள் மக்களிடம் பிரபலமாக இருக்கும் நடிகை என்பதையும் தாண்டி, சில அதிர்ச்சிக்கரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த பட்டியலில் நடிகை ரேஷ்மாவும் தற்போது ஈடுபட்டு இருப்பது கோலிவுட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
‘வேலைனு வந்துட்டா வெள்ளக்காரன்’ என்ற படத்தின் மூலம் பிரபலமான ரேஷ்மா, சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்திருக்கிறார். பிக் பாஸ் மூலம் மக்களிடம் பிரபலமானவர், அந்நிகழ்ச்சியால் பல திரைப்பட வாய்ப்புகளையும் பெற்றார். ஆனால், கொரோனா பிரச்சினையால் தற்போது படப்பிடிப்பு இல்லாததால் அவர் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளார்.
இதனால், வருமானத்திற்காக தனது சமூக வலைதளப் பக்கத்தில் அழகு சாதனைப் பொருட்களை விளம்பரம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். நடிகைகள் அழகு சாதனைப் பொருட்கள் விளம்பரப் படங்களில் நடிப்பது சாதாரண் ஒன்று தான். ஆனால், இவர் அப்படி செய்யவில்லை.
தனது சமூக வலைதளப் பக்கத்தில், ஒரு நிறுவனத்தின் அழகு சாதனை பொருள் குறித்து பேசும் வீடியோவை வெளியிட்டு, உதை பயன்படுத்துங்கள் என்று கூறுபவர், அந்த பொருள் எப்படி எல்லாம் வேலை செய்கிறது, என்றும் விவரிக்கிறார். மொத்தத்தில் மக்களிடம் தேடிச் சென்று பொருட்களை விற்பனை செய்யும் ஒரு விற்பனையாளர் போல ரேஷ்மா, இப்பொருட்களை விளம்பரம் செய்கிறார். ரேஷ்மா மட்டும் அல்ல, பல சீரியல் நடிகைகளும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஆனால், சினிமா நடிகைகளில் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டவர் ரேஷ்மா தான் முதல் நபர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதோ அவரது விளம்பரம்,
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...