ஷங்கர் இயக்கத்தில், லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் கமல்ஹாசன் நடித்து வரும் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி இரவு ஏற்பட்ட விபத்தில் உதவி இயக்குநர் கிருஷ்ணா, உதவி தயாரிப்பு நிர்வாகி சந்-திரன், மதுசூதனன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய கமல்ஹாசன், உயிரிழந்தவர்கள் குடும்பத்தாருக்கு தலா ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்படும், என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில், கமல்ஹாசன் அறிவித்த நிதியுதவி உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரிடம் இன்று வழங்கப்பட்டது. இதற்காக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தில் நடைபெற்ற எளிய விழாவில் நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர், லைகா நிறுவனத்தினர் ஆகியோர் இணைந்து காசோலையை வழங்கினார்கள். இந்நிகழ்வில் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட நிர்வாகிகளும் கலந்துக் கொண்டார்கள்.
சந்திரன் மனைவி திருமதி ராதா, மதுவின் தந்தை மாலகொண்டையா, உதவி இயக்குநர் கிருஷ்ணாவின் மனைவி அமிதா ஆகியோர் தலா ரூ.1 கோடி உதவித் தொகையைப் பெற்றுக் கொண்டனர். நான்காவதாக படுகாயம் அடைந்த லைட்மேன் ராமராஜனின் குரும்பத்தாருக்கு ரூ.90 லட்சம் வழங்கப்பட்டது. இதனை அவரது சகோதரி பெற்றுக் கொண்டார். சிறு காயமடைந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டதாக தெரிவித்தனர்.
இந்த ரூ.4 கோடியில், நடிகர் கமல்ஹாசன் ரூ.1 கோடியும், இயக்குநர் ஷங்கர் ரூ.1 கோடியும், லைகா நிறுவனம் ரூ.2 கோடியும் வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் திரையுலகில் முன்னணி வசூல் நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன், பல்வேறு ஜானர்களில் தனது அபாரமான நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார்...
விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாகாது, என்று தயாரிப்பு தரப்பு நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது...
நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...