Latest News :

நடிகர் கார்த்தியின் பிறந்தநாள் கொண்டாட்டம்! - தமிழகம் முழுவதும் நடக்கும் நலத்திட்ட பணிகள்
Tuesday May-14 2024

தமிழ் சினிமா மட்டும் இன்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஏன தென்னிந்தியா முழுவதும் ரசிகர்களை கொண்ட நடிகர் கார்த்தி, சினிமாவையும் கடந்த பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக விவசாயிகளை ஊக்குவிக்கவும், இயற்கை விவாசயத்தை வளர்க்கவும் உழவன் அறக்கட்டளை மூலம் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.  நடிகர் கார்த்தியின் வழியை பின்பற்றி அவரது ரசிகர்களும் பொதுமக்களுக்கான நலத்திட்ட பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள்.

 

அந்த வகையில், நடிகர் கார்த்தியின் பிறந்தநாளான மே 25 ஆம் தேதியை கொண்டாடும் விதமாக அவரது ரசிகர்கள் தமிழகம் முழுவதும் சும்மார் 300-க்கும் மேற்பட்ட நலத்திட்ட நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மட்டும் 25-க்கும் மேற்பட்ட நலத்திட்ட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

 

Karthi Birthday

 

முதலாவதாக மே 12 ஆம் தேதி சென்னையில் உள்ள வியாசர்பாடி, தண்டையார்பேட்டை, கோடம்பாக்கம், திருவான்மியூர் ஆகிய பகுதிகளில் நீர் மோர் வழங்குதல், முதியோர் இல்லத்தில் அன்னதானம், குழந்தைகள் காப்பகத்தில் அன்னதானம் ஆகியவை வழங்கப்பட்டது.

 

இதை தொடர்ந்து மே-19, மே-26 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் அன்னதானம், நீர்மோர் வழங்குதல், மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்குதல், மரக்கன்றுகள் வழங்குதல், விதைப்பந்துகள் வழங்குதல், ஆதரவற்றவர்களுக்கு உதவுதல், கோவில்களில் சிறப்பு அபிஷேகம் அன்னதானம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன.

 

Karthi Birthday

 

குறிப்பாக மே 25 ஆம் தேதி சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இரத்த தானம் மற்றும் உடல் தானம் செய்ய இருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் ரசிகர்கள் இரத்த தானம் செய்ய இருக்கிறார்கள்.

 

நடிகர் கார்த்தியின் ரசிகர்கள் செயலை கண்ட பொது மக்கள் பலரும் கார்த்தியையும் ரசிகர்களையும் வாழ்த்தி பாராட்டி வருகிறார்கள்.

 

Karthi Birthday

Related News

9756

இப்படி ஒரு வேடத்தில் நடிக்கவில்லை என்றால் நான் நடிகையாக இருக்க தகுதி இல்லாதவள் - நடிகை வாணி போஜன் உருக்கம்
Saturday June-01 2024

முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்களை வைத்து மிகப்பெரிய திரைப்படங்களை தயாரிப்பதோடு, வளர்ந்து வரும் நடிகர்கள் மற்றும் அறிமுக நடிகர்களை வைத்தும் பல தரமான திரைப்படங்களை தயாரித்து மற்றும் வெளியீட்டு வரும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம், முதல் முறையாக ‘அஞ்சாமை’ என்ற படத்தை முழுமையாக வாங்கி வெளியிடுகிறது...

விஜய் மற்றும் அஜித் குறும்படங்களில் நடிக்க வேண்டும் - வின் ஸ்டார் விஜய் அறிவுறுத்தல்
Friday May-31 2024

’எப்போதும் ராஜா’ படத்தின் மூலம் இயக்குநராகவும், நாயகனாகவும் தமிழ் சினிமாவில் அறிமுகமான வின் ஸ்டார் விஜய், தற்போது ‘மக்கள் தொடர்பாளன்’ என்ற படத்தில் நாயகனாக நடித்து வரும் நிலையில், ‘ஏழையின் சிரிப்பில்’ என்ற குறும்படத்தை இயக்கி நடித்திருக்கிறார்...