Latest News :

ஓடிடி தளத்தில் வெளியான ஜிவி பிரகாஷ் குமாரின் ‘கள்வன்’!
Wednesday May-15 2024

அறிமுக இயக்குநர் பிவி சங்கர் இயக்கத்தில், பாரதிராஜா, ஜி.வி.பிரகாஷ் குமார், இவானா ஆகியோர் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான படம் ‘கள்வன்’. ’ராட்சசன்’ உள்ளிட்ட பல வெற்றி படங்களை தயாரித்த ஆக்சஸ் ஃபிலிம் பேக்டரி ஜி.டில்லி பாபு தயாரித்த இப்படம், எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

 

இந்த நிலையில், ‘கள்வன்’ திரைப்படம் மே 14 ஆம் தேதி முதல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியாகியுள்ளது.

 

ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு ரேவா பின்னணி இசையமைத்துள்ளார். சான் லோகேஷ் படத்தொகுப்பையும், என்.கே.ராகுல் தயாரிப்பு வடிவமைப்பு பணிகளையும் செய்துள்ளார்கள். இப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையை, எழுத்தாளர் ரமேஷ் ஐயப்பனுடன் இயக்குநர் பி.வி.ஷங்கர் எழுதியுள்ளார்.  

Related News

9758

விஜய் மற்றும் அஜித் குறும்படங்களில் நடிக்க வேண்டும் - வின் ஸ்டார் விஜய் அறிவுறுத்தல்
Friday May-31 2024

’எப்போதும் ராஜா’ படத்தின் மூலம் இயக்குநராகவும், நாயகனாகவும் தமிழ் சினிமாவில் அறிமுகமான வின் ஸ்டார் விஜய், தற்போது ‘மக்கள் தொடர்பாளன்’ என்ற படத்தில் நாயகனாக நடித்து வரும் நிலையில், ‘ஏழையின் சிரிப்பில்’ என்ற குறும்படத்தை இயக்கி நடித்திருக்கிறார்...

சினிமா நிலை கவலைக்கிடமாக இருக்கிறது - ’வேட்டைக்காரி’ விழாவில் வருத்தம் தெரிவித்த வைரமுத்து
Friday May-31 2024

ஸ்ரீ கருப்பர் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் விஷ்ணுப்பிரியா வேலுச்சாமி தயாரிப்பில், காளிமுத்து காத்தமுத்து இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘வேட்டைக்காரி’...