Latest News :

’தி வெர்டிக்ட்’ படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்ட நட்சத்திர தம்பதி!
Wednesday May-15 2024

அக்னி எண்டர்டெயின்மெண்ட் (அமெரிக்கா) அதன் சென்னை துணை நிறுவனத்துடன் இணைந்து கோலிவுட்டில் தனது முதல் திரைப்படத்தை அறிவித்துள்ளது. இத்திரைப்படம் முழுக்க முழுக்க அமெரிக்காவின் டெக்சாஸ், ஆஸ்டினில் படமாக்கப்பட்டுள்ளது.

 

அக்னி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின்  முதல் திரைப்படமாக உருவாகும் ’தி வெர்டிக்ட்’ கோர்ட் ரூம் டிராமா, திரில்லராக உருவாகியுள்ளது.  தயாரிப்பாளர் ரகாஷ் மோகன்தாஸ் மற்றும் இயக்குநர் கிருஷ்ணா சங்கர் இருவரும்  டெக்சாஸில் வசிப்பவர்கள். இப்படம் முழுக்க முழுக்க அமெரிக்காவின் ஆஸ்டின், டெக்சாஸில் படமாக்கப்பட்ட முதல் சர்வதேச இந்தியத் திரைப்படமாகும்.  மேலும் இப்படம் 23 நாட்களில் படமாக்கப்பட்டுள்ளது.

 

நடிகை சுஹாசினி மணிரத்னம், வரலக்ஷ்மி சரத்குமார், ஸ்ருதி ஹரிஹரன், வித்யுலேகா ராமன் மற்றும்  பிரகாஷ் மோகன்தாஸ் ஆகியோரோடு உள்ளூர் அமெரிக்கக் கலைஞர்களும் ஐந்து முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

 

புதுப்பேட்டை, 7ஜி ரெயின்போ காலனி படப்புகழ் ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இறுதிச்சுற்று, சூரரைப் போற்று மற்றும் விக்ரம் வேதா படப்புகழ் சதீஷ் சூர்யா படத்தொகுப்பு செய்துள்ளார். பிரபல இளம் பாடகர் ஆதித்யா ராவ் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். என்.கோபிகிருஷ்ணன் திரைப்பட நடிகர்கள் தேர்வு மற்றும் மார்க்கெட்டிங்க் பணிகளைச் செய்துள்ளார்

 

அனைவரும் ரசித்து மகிழும் சிறப்பான படைப்புகளை மாறுபட்ட களங்களில் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு அக்னி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் துவங்கப்பட்டுள்ளது. அந்தவகையில் “தி வெர்டிக்ட்” திரைப்படம் இந்தியத் திரைத்துறையில் ஒரு ஆரம்பமாக இருக்கும்.

 

கோலிவுட்டின் வசீகர ஜோடியான சினேகா - பிரசன்னா ஆகியோர் தற்போது சமூக ஊடகங்களில் டிரெண்டிங்கில் இருந்து வரும் ’தி வெர்டிக்ட்’ படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டனர்.

Related News

9760

இப்படி ஒரு வேடத்தில் நடிக்கவில்லை என்றால் நான் நடிகையாக இருக்க தகுதி இல்லாதவள் - நடிகை வாணி போஜன் உருக்கம்
Saturday June-01 2024

முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்களை வைத்து மிகப்பெரிய திரைப்படங்களை தயாரிப்பதோடு, வளர்ந்து வரும் நடிகர்கள் மற்றும் அறிமுக நடிகர்களை வைத்தும் பல தரமான திரைப்படங்களை தயாரித்து மற்றும் வெளியீட்டு வரும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம், முதல் முறையாக ‘அஞ்சாமை’ என்ற படத்தை முழுமையாக வாங்கி வெளியிடுகிறது...

விஜய் மற்றும் அஜித் குறும்படங்களில் நடிக்க வேண்டும் - வின் ஸ்டார் விஜய் அறிவுறுத்தல்
Friday May-31 2024

’எப்போதும் ராஜா’ படத்தின் மூலம் இயக்குநராகவும், நாயகனாகவும் தமிழ் சினிமாவில் அறிமுகமான வின் ஸ்டார் விஜய், தற்போது ‘மக்கள் தொடர்பாளன்’ என்ற படத்தில் நாயகனாக நடித்து வரும் நிலையில், ‘ஏழையின் சிரிப்பில்’ என்ற குறும்படத்தை இயக்கி நடித்திருக்கிறார்...