Latest News :

நடிகர் பாலகிருஷ்ணாவின் மகன் அறிமுகமாகும் படத்தின் அறிவிப்பு வெளியானது!
Friday September-06 2024

தெலுங்கு திரையுலகின் முன்னணி மாஸ் நாயகனான நந்தமுரி பாலகிருஷ்ணாவின் மகன் நந்தமுரி மோக்‌ஷக்ன்யா  தேஜா நாயகனாக அறிமுகமாகும் படத்தின் அறிவிப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கும் இப்படத்தை லெஜண்ட் புரொடக்‌ஷன்ஸ் உடன் இணைந்து எஸ்.எல்.வி சினிமாஸ் சார்பில் சுதாகர் செருக்குரி தயாரிக்கிறார். எம்.தேஜஸ்வினி நந்தமுரி இப்படத்தை வழங்குகிறார்.

 

நமது புராணங்களில் உள்ள வரும், ஒரு பழங்கால புராணக்கருவை மையமாக வைத்து, பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாகும் இப்படம், மோக்‌ஷக்ன்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 

 

மோக்‌ஷக்ன்யாவை முன்னணி நடிகராக அறிமுகப்படுத்த, பாலகிருஷ்ணாவும் அவரது குடும்பத்தினரும் சரியான ஒரு கதையையும், மிக பிரபலமான இயக்குநரையும் தேடி வந்தனர். அவர்களின் தேடல், இறுதியாக அவர்களை பிரசாந்த் வர்மாவிடம் அழைத்துச் சென்றது. அவர் ஃபேண்டஸி கமர்ஷியல் அம்சங்களுடன் அருமையான பொழுதுபோக்கு திரைப்படங்களை  உருவாக்குவதில்,  புகழ் பெற்றவர். பிரசாந்த் வர்மாவின் சமீபத்திய ஹனுமான் திரைப்படம், மிகப்பெரிய பிளாக்பஸ்டராக பான் இந்தியா வெற்றியைப் பெற்றது. அவர் மோக்‌ஷக்னாவின் அறிமுகத்தை மிகச்சிறப்பாக அரங்கேற்றவுள்ளார். 

 

ஒரு சமூக-ஃபேண்டஸி படத்தில், இயக்குநர் பிரசாந்த் வர்மாவுடன் இணைந்து, மோக்‌ஷக்ன்யாவின் திரை அறிமுகத்தை நிகழ்த்துவது,  ரசிகர்களிடம் அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பாலகிருஷ்ணாவின் நம்பிக்கை ஆகும். 

 

மோக்‌ஷக்ன்யா  தனது அறிமுகப் படத்தில், சிறந்த நடிப்பை வழங்க வேண்டுமென்பதற்காக கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார். நந்தமுரி ரசிகர்கள் மற்றும் பொதுவான திரைப்பட ஆர்வலர்களை கவரும் வகையில், நடிப்பு, சண்டை மற்றும் நடனம் ஆகியவற்றில் விரிவான பயிற்சி பெற்று வருகிறார்.

 

இப்படம் குறித்து இயக்குநர் பிரசாந்த் வர்மா கூறுகையில், “மோக்‌ஷக்ன்யாவை சினிமாவில் அறிமுகப்படுத்துவது, மிகப்பெரிய கவுரவம் மற்றும் மிகப்பெரிய பொறுப்பு. என் மீதும் என் கதை மீதும் பாலகிருஷ்ணா வைத்துள்ள நம்பிக்கைக்கு நான் எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன். இந்த திரைக்கதை நமது இதிகாசத்திலிருந்து ஈர்க்கப்பட்ட கருவைக்கொண்டு உருவாக்கப்பட்டது, இதிகாசம் சொல்லப்பட வேண்டிய அற்புதமான கதைகளின் தங்கச் சுரங்கமாகும். இதுவும் PVCU இன் ஒரு பகுதியாகும், மேலும் இது என் சினிமா யுனிவர்ஸை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும்.” என்றார்.

 

தயாரிப்பாளர் சுதாகர் செருகூரி கூறுகையில், ”மோக்‌ஷக்ன்யாவை சினிமாவில் அறிமுகப்படுத்துவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம், SLV சினிமாஸில் எங்களுக்கு இந்த பொன்னான வாய்ப்பை வழங்கிய பாலகிருஷ்ணா அவர்களுக்கு நன்றி. பிரசாந்த் வர்மா தனது அறிமுகத்திற்கு மோக்‌ஷக்னாவுக்கு மிகவும் பொருத்தமான ஒரு அற்புதமான கதையை கொண்டு வந்துள்ளார். இந்தப் படத்தைப் பார்க்க நாங்கள் அனைவரும் ஆவலாக உள்ளோம். இந்த திரைப்படம் குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்” என்றார்.

Related News

10002

துல்கர் சல்மானை நடிப்பு சக்கரவர்த்தியாக மக்கள் கொண்டாடுவார்கள் - நடிகர் ராணா பாராட்டு
Thursday November-06 2025

இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...

சினிமாவில் வெற்றி பெற 4 விசயங்கள் அவசியம்! - இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்
Thursday November-06 2025

பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...

’ஆர்யன்’ பட கிளைமாக்ஸ் மாற்றம்! - வெற்றி விழாவில் படக்குழு தகவல்
Wednesday November-05 2025

அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

Recent Gallery