கமல்ஹாசனின் ‘குணா’ திரைப்படத்தின் மறு வெளியீட்டுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்!
Saturday September-07 2024

கமல்ஹாசன் நடிப்பில், சந்தான பாரதி இயக்கத்தில் கடந்த 1991 ஆம் ஆண்டு வெளியான ‘குணா’ திரைப்படத்தை டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மீண்டும் திரையரங்குகளில் கடந்த ஜூன் 21 ஆம் தேதி வெளியிட இருந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்ஷியாம் ஹேம்தேவ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

 

அவர் தாக்கல் செய்த மனுவில், ‘குணா’ திரைப்படத்தின் பதிப்புரிமையை தாங்கள் வாங்கியுள்ளதாகவும், அதனால் படத்தை மறு வெளியீடு செய்வதற்கு தடை விதிக்க கோரினார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ‘குணா’ படத்தை மீண்டும் வெளியிட இடைக்கால தடை விதித்ததோடு, படத்தை வெளியிடும் பணிகளில் ஈடுபட்டிருந்த பிரமீடு மற்றும் எவர்கிரீன் மீடியா நிறுவனங்கள் பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பியது.

 

இந்த நிலையில், இந்த வழக்கு நேற்று  விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் வழக்கறிஞரை நியமித்து, குணா மறு வெளியீட்டின் போது திரையரங்க வசூல் தொகையை வழக்கின் பெயரில் வரவு வைக்க ஆணையிட்டு, வழக்கின் விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Related News

10003

’தாய் கிழவி’ மூலம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன் - சிவகார்த்திகேயன்
Wednesday March-11 2026

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...

உண்மை சம்பவத்தை இரத்தமும் சதையுமாக சொல்லும் ‘மனிதன் தெய்வமாகலாம்’!
Tuesday March-10 2026

வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...

நயன்தாராவை கெளரவித்த ‘பேட்ரியாட்’ படக்குழு!
Tuesday March-10 2026

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில்  நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...

Recent Gallery