’யாத்திசை’ தயாரிப்பாளரின் தயாரிப்பில் வெள்ளித்திரையில் நாயகனாக அறிமுகமாகும் சின்னத்திரை நடிகர்!
Sunday September-08 2024

கடந்த ஆண்டு வெளியான ‘யாத்திசை’ திரைப்படம் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்ஐ பெற்ற நிலையில், அப்படத்தின் தயாரிப்பாளர் கே.ஜெ.கணேஷ் வீனஸ் இன்ஃபோடைமெண்ட் சார்பில் தயாரிக்கும் புதிய படத்தை, யோகி பாபு நடிப்பில் வெளியான ‘லக்கி மேன்’ படத்தை இயக்கிய பாலாஜி வேணுகோபால் இயக்குகிறார்.

 

இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தில் விஜய் டிவி மற்றும் அமேசான் பிரைம் இணையத் தொடர் 'வதந்தி' மூலம் புகழ் பெற்ற குமரன் தங்கராஜன்  வெள்ளித்திரை நாயகனாக அறிமுகம் ஆகிறார். குமரவேல், ஜி எம் குமார், லிவிங்ஸ்டன், பால சரவணன், வினோத் சாகர் மற்றும் பலர்  முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

 

அச்சு ராஜாமணி இசையமைக்கும் இப்படத்திற்கு ஜெகதீஷ் ஒளிப்பதிவு செய்கிறார். மதன் படத்தொகுப்பு செய்ய, வாசு கலை இயக்குநராக பணியாற்றுகிறார். 

 

அனைத்து வயதினரும் கண்டு ரசித்து சிரித்து மகிழும் வகையில் கலகலப்பான பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகும் இப்படத்தின் பெருமளவு படப்பிடிப்பு நிறைவடைந்து வெளியீட்டுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. திரைப்படத்தின் தலைப்பு மற்றும் பிற தகவல்களை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது.

Related News

10008

’தாய் கிழவி’ மூலம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன் - சிவகார்த்திகேயன்
Wednesday March-11 2026

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...

உண்மை சம்பவத்தை இரத்தமும் சதையுமாக சொல்லும் ‘மனிதன் தெய்வமாகலாம்’!
Tuesday March-10 2026

வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...

நயன்தாராவை கெளரவித்த ‘பேட்ரியாட்’ படக்குழு!
Tuesday March-10 2026

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில்  நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...

Recent Gallery