பல பிரச்சினைகளை எதிர்க்கொண்ட விஜயின் ‘மெர்சல்’ அத்தனை தடைகளை தகர்த்தெரிந்து அறிவித்தது போல தீபாவளியன்று (நாளை) வெளியாகிறது.
வனவிலங்கு வாரியத்தின் எதிர்ப்பால், எங்கே படம் தீபாவளிக்கு ரிலிஸாகாமல் போய்விடுமோ! என்று விஜய் ரசிகர்கள் அச்சப்பட்ட நிலையில், நேரடியாக களத்தில் இறங்கிய விஜய், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமையை சந்தித்த மறுநாளே, வனவிலங்கு வாரியத்தின் அவசர கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ‘மெர்சல்’ படத்திற்கு தடையில்லா சான்றிதழ் வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, இந்த சான்றிதழை சென்சார் குழுவுக்கு படக்குழு வழங்கியதை தொடர்ந்து, இன்று சுமார் 11 மணியளவில் ‘மெர்சல்’ படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டு விடும். இதனால், படமும் சொன்னது போல் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது.
சென்னையில் உள்ள சில திரையரங்குகளில் நேற்று இரவு டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில், சோர்ந்து போன விஜய் ரசிகர்கள் தற்போது மீண்டும் சுறுசுறுப்படைந்துள்ளார்கள்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...