இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில், ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜாவின் பிரமாண்ட தயாரிப்பில் உருவான ‘தங்கலான்’ கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி தென் இந்தியாவில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. குறிப்பாக தமிழ்நாடு மட்டும் இன்றி ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகப்பெரிய அளவில் படம் கொண்டாடப்பட்டது.
இந்த நிலையில், இந்தி மொழியில் கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி வட இந்தியா முழுவதும் வெளியான ‘தங்கலான்’ அங்கும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று ரசிகர்கள் மற்றும் ஊடகங்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தி மொழியில் வெளியான நாள் முதல் வட இந்திய மாநிலங்களில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் ‘தங்கலான்’ திரைப்படத்தை வட இந்திய ஊடகங்கள் மிகப்பெரிய அளவில் பாராட்டியிருப்பதோடு, இயக்குநர் பா.இரஞ்சித்தின் மேக்கிங், நடிகர் விக்ரம், நடிகை பார்வதி மற்றும் சக நடிகர்களின் நடிப்பு மற்றும் ஜீ.வி.பிரகாஷ் குமார் இசை என அனைத்தையும் பாராட்டியுள்ளன.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...