நடிகை சம்யுக்தாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது கதாபாத்திர புகைப்படத்தை வெளியிட்ட ‘சுயம்பு’ படக்குழு!
Thursday September-12 2024

தென்னிந்திய ரசிகர்களின் பேவரைட் நாயகிகளில் ஒருவராக உருவெடுத்துள்ள நடிகை சம்யுக்தா, தற்போது பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கத்தில், பிக்சல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், நிகில் நடிப்பில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் ‘சுயம்பு’ படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

 

இந்த நிலையில், நவம்பர் 11 ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடிய நடிகை சம்யுக்தாவுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக ‘சுயம்பு’ படக்குழு அப்படத்தில் சம்யுக்தாவின் கதாபாத்திரப் உகைப்படத்தை வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படத்தில், தைரியம் மிக்க வீராங்கனையாக கேடயத்துடன் வில் அம்பு ஏந்தியபடி இருக்கிறார் சம்யுக்தா. 

 

நிகிலின் 20வது படமான இதில் அவர் ஒரு போர் வீரனாக நடிக்க, சம்யுக்தா மற்றும் நபா நடேஷ் ஆகியோர் நிகிலுக்கு ஜோடியாக கதாநாயகிகளாக நடித்துள்ளனர். 

 

போர் பின்னணியில் உருவாகும் இப்படத்தை  தாகூர் மது வழங்ங்க, பிக்சல் ஸ்டுடியோஸ் மூலம் புவன் மற்றும் ஸ்ரீகர்,  மிகப்பெரிய பட்ஜெட் மற்றும் முதல்தர தொழில்நுட்பத்துடன் தயாரித்துள்ளனர்.

 

பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கியுள்ள இப்படத்திற்கு ’கேஜிஎஃப்’ மற்றும் ’சலார்’ படப்புகழ் ரவி பஸ்ரூர் இசையமைக்க, கே.கே செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். எம் பிரபாகரன் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார்.

Related News

10018

’தாய் கிழவி’ மூலம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன் - சிவகார்த்திகேயன்
Wednesday March-11 2026

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...

உண்மை சம்பவத்தை இரத்தமும் சதையுமாக சொல்லும் ‘மனிதன் தெய்வமாகலாம்’!
Tuesday March-10 2026

வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...

நயன்தாராவை கெளரவித்த ‘பேட்ரியாட்’ படக்குழு!
Tuesday March-10 2026

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில்  நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...

Recent Gallery