’டான்’ பட இயக்குநர் சிபி சக்ரவர்த்தி பத்திரிகையாளர்கள் சந்திப்பு!
Monday September-16 2024

எஸ்.கே புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பி, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி ரூ.100 கோடி வசூலித்த ‘டான்’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான சிபி சக்ரவர்த்தியின், அடுத்த படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும் நிலையில், அவருக்கும், இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றும் ஸ்ரீ வர்ஷினிக்கும் செப்டம்பர் 5 ஆம் தேதி ஈரோட்டில் திருமணம் நடைபெற்றது.

 

சிபி சக்ரவர்த்தி - ஸ்ரீ வர்ஷினி திருமணத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலர் கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். திருமணத்திற்குப் பின் சிபி சக்கரவர்த்தியும் அவரது மனைவி ஸ்ரீ வர்ஷினி சிபியும் சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை  சந்தித்தனர்.

 

 'டான்' படத்திற்கு பத்திரிக்கையாளர்கள் கொடுத்த ஆதரவிற்கு நன்றி தெரிவித்த சிபி, அடுத்த படத்திற்கும் பத்திரிக்கையாளர்கள் மற்றும் ரசிகர்கள் ஆதரவு தேவை என்றார். வெளியூரில் திருமணம் நடந்ததால் யாரையும் அழைக்க முடியவில்லை என்பதற்காகவே இந்த சந்திப்பு என்றார்.

 

ரூ.100 கோடி வசூல் ஈட்டிய படங்களின் பட்டியலில் முதல் படத்திலேயே இடம் பிடித்த இயக்குநர் சிபி சக்ரவர்த்தி, தனது அடுத்த படத்தை மிக பிரமாண்டமாக இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம், ரசிகர்களும் இயக்குநர் சிபி சக்ரவர்த்தியின் அடுத்த படம் மீது மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள்.

Related News

10029

’தாய் கிழவி’ மூலம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன் - சிவகார்த்திகேயன்
Wednesday March-11 2026

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...

உண்மை சம்பவத்தை இரத்தமும் சதையுமாக சொல்லும் ‘மனிதன் தெய்வமாகலாம்’!
Tuesday March-10 2026

வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...

நயன்தாராவை கெளரவித்த ‘பேட்ரியாட்’ படக்குழு!
Tuesday March-10 2026

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில்  நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...

Recent Gallery