பிரபல தொழிலதிபர் லெஜண்ட் சரவணன், ‘தி லெஜண்ட்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானார். அப்படத்தை தொடர்ந்து தற்போது தனது இரண்டாவது படத்தை தொடங்கியிருக்கிறார். தி லெஜண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்படும் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிவடைந்த நிலையில், தற்போது இரண்டாவது கட்ட படப்பிடிப்பு தூத்துக்குடி அருகே உள்ள லெஜண்ட் சரவணனின் சொந்த ஊரான பணிக்க நாடார் குடியிருப்பில் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
'காக்கி சட்டை', 'கொடி', உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவரும் சமீபத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற 'கருடன்' திரைப்படத்தின் இயக்குநருமான ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கும் இப்படத்தில் லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை பாயல் ராஜ்புத் நடிக்கிறார். மேலும், ஷாம், ஆண்ட்ரியா, பாகுபலி பிரபாகர், சந்தோஷ் பிரதாப், லியோ புகழ் பேபி இயல் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, எஸ். வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். பிரதீப் படத்தொகுப்பை கவனிக்க, கலை இயக்குநராக துரைராஜ் பணியாற்றுகிறார். மேத்யூ மகேஷ் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார்.
தூத்துக்குடியை மையமாக வைத்து உண்மை சம்பவம் ஒன்றின் அடிப்படையில் பரபரப்பான ஆக்ஷன் திரில்லராக உருவாகும் இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டிலும், மும்பை, டில்லி உள்ளிட்ட நகரங்களிலும் நடைபெற உள்ளது.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...