ஆர்.ஜி.வி டென் நிறுவனம் சார்பில் ரவி வர்மா தயாரிப்பில், கிரி கிருஷ்ணா கமல் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘சாரி’. (SAAREE - Log Line - Too much love can be scary) இந்தப் படம் பல நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர்.
சேலை அணிந்த ஒரு பெண்ணின் மீது தீரா அன்பு வைத்திருக்கும் ஒருவன் அவளைப் பின்தொடர்ந்து தொல்லை தருகிறான். ஒருக்கட்டத்தில் அதுவே ஆபத்தாக மாறுகிறது என்பதுதான் ‘சாரி’ படத்தின் கதை. படத்திற்கு சபரி ஒளிப்பதிவு செய்துள்ளார். இதில் கதாநாயகனாக சத்யா யாது நடித்திருக்கிறார். கதாநாயகியாக ஆராத்யா தேவி நடித்துள்ளார். முன்பு ஸ்ரீலக்ஷ்மி என்று அழைக்கப்பட்ட ஆராத்யா தேவி கேரளாவைச் சேர்ந்தவர்.
சமூகவலைதளங்களில் ஒருவர் அனுப்பிய ரீல்ஸ் மூலமாக ஆராத்யா தேவியை இயக்குந ராம் கோபால் வர்மா கண்டறிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய 4 மொழிகளில் நவம்பர் மாதம் வெளியாகிறது.
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே...
நேதாஜி புரொடக்ஷன்ஸ் சோலா சக்ரவர்த்தி, ஜி...
எம். ஜி. ஆர். சிவாஜி அகாடமி என்ற தலைப்பில் பிரபல மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபு, ஆண்டு தோறும் சிறந்த பட தயாரிப்பாளர், சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த கதாநாயகன், கதாநாயகி மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவித்து வருகிறார்...