நித்தி கிரியேட்டர்ஸ் சார்பில் பி.ராஜசேகரன் தயாரிப்பில், முருகாந்தம் இணைத் தயாரிப்பில், கார்த்தி தட்சிணாமூர்த்தி இயக்கத்தில் உருவாகும் படம் ‘திரைவி’. முனீஷ்காந்த், அசோக், ஆஷ்னா சாவேரி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இப்படத்தில் நிழல்கள் ரவி, சரவணன் சுப்பையா, வினோத் சாகர், நான் சரவணன், பூஜா அதினா, எட்வின் ஆண்டனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
உலகில் நல்லவர்கள் யாரும் கிடையாது அதேபோல் கெட்டவர்கள் என்று யாரும் கிடையாது. சூழ்நிலைதான் அவரவரை அடையாளப்படுத்துகிறது எனும் மையக்கருத்தை வலியுறுத்தும் விதமாக உருவாகியுள்ள இப்படத்தின் டீசரை நடிகர் விஜய் சேதுபதி சமீபத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆர்.அதிசயராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு என்.டி.ஆர் இசையமைத்திருக்கிறார். அருண்பாரதி மற்றும் வெ.மதன்குமார் பாடல்கள் எழுத, ஆர்.வசந்தகுமார் படத்தொகுப்பு செய்திருக்கிறார். எஸ்.எல்.பாலாஜி நடனக் காட்சிகளை வடிவமைத்துள்ளார். தயாரிப்பு மேற்பார்வையை எஸ்.எம்.ராஜ்குமார் கவனிக்க, மக்கள் தொடர்பாளர் பணியை வெங்கட் கவனிக்கிறார்.
தற்போது வெளியாகியிருக்கும் படத்தின் டீசர் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று படத்தின் மீதான் எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கும் நிலையில், படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது.
நடிகரும் இயக்குநருமான போஸ் வெங்கட் இயக்கத்தில், விமல் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘சார்’...
உண்மை குற்ற சம்பவங்களின் பின்னணியில் உருவாகும் கிரைம் திரில்லர் படம் ‘யாத்ரீகன்’...
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8 வது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார்...