கன்று & கங்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் கந்தசாமி ரகுபதி தயாரிப்பில், அறிமுக நடிகர்கள் இணைந்து உருவாக்கியுள்ள ‘உனக்காக வாழ்கிறேன்’ என்ற ஆல்படம் பாடல் காதலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
இந்த பாடலின் வரிகளை எழுதி இயக்கியிருக்கும் குகன், பாடலின் நாயகனாகவும் நடித்து அசத்தியிருக்கிறார். ஏ.ஜி.ராக்கர் இசையமைத்துள்ள இப்பாடலுக்கு ஜோயல் ஆடியோ மிக்ஸிங் செய்ய, ஒளிப்பதிவு, வி.எப்.எக்ஸ், எடிட்டிங் மற்றும் டி.ஐ ஆகிய பணிகளை அப்பு கே.சாமி செய்துள்ளார்.
ஜெகதீஷின் குரலில் வெளியாகியுள்ள இந்த ‘உனக்காக வாழ்கிறேன்’ பாடல், சமீபத்தில் சென்னையில் வெளியிடப்பட்டது. இதில், இயக்குநர் யார் கண்ணன், நடிகர்கள் அபி சரவணன் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களோடு, பாடல் குழுவினரும் இடம்பெற்றுள்ளார்கள்.
இசை ஆல்பத்தின் மூலம் அறிமுகமாகியுள்ள இந்த அறிமுக கலைகஞர்கள் விரைவில் திரைப்படம் ஒன்றின் மூலம் சினிமாவில் அறிமுகமாக உள்ளார்கள்.
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...