Latest News :

கோலிவுட்டை கலக்க வரும் குட்டி நட்சத்திரம் லக்‌ஷனா ரிஷி!
Thursday September-26 2024

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி மக்களின் கனவம் ஈர்த்தவர்கள், பின்னாளில் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக உருவெடுத்திருக்கிறார்கள். நடிகர் கமல்ஹாசன், நடிகைகள் ஸ்ரீதேவி, மீனா, குட்டி பத்மினி உள்ளிட்ட பல கலைஞர்கள் இதற்கு சான்றாக இருக்க, தற்போது இந்த பட்டியலில் இணைவதற்கு தயாராக இருக்கிறார் குழந்தை நட்சத்திரம் லக்‌ஷனா ரிஷி.

 

‘கால் கொலுசு’ என்ற படத்தை இயக்கி, தயாரித்து நடித்த டாக்டர்.எஸ்.வி.ரிஷி சமீபத்தில் மறைந்த தனது தந்தையின் நினைவாக ‘எங்க அப்பா’ என்ற வீடியோ இசைப் பாடலை வெளியிட்டார். இதில் தனது மகள் லக்‌ஷனா ரிஷியை பாடலுக்கு ஏற்ப வாயசைக்க வைத்து, நடனம் ஆடி நடிக்க வைத்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தியிருந்தார். 

 

இந்த பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் கே.பாக்யராஜ், பேரரசு உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் கலந்துக்கொண்டு குழந்தை நட்சத்திரம் லக்‌ஷனா ரிஷியின் நடிப்பை பார்த்து, “எதிர்காலத்தில் பிரபலமான குழந்தை நட்சத்திரமாகவும், பெரிய நாயகியாகவும் வருவாய்” என்று பாராட்டி வாழ்த்தி பேசினார்கள். மேலும், இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பிரபல இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் தங்களது படங்களில் லக்‌ஷனா ரிஷியை குழந்தை நட்சத்திரமாக நடிக்க வைக்க தொலைபேசி மூலம் தொடர்புக் கொண்டு பேசி வருகிறார்களாம். இதில் முன்னணி நாயகர்களின் படங்களும் அடங்கும்.

 

டாக்டர்.எஸ்.வி.ரிஷி விரைவில் தான் சொந்தமாக தயாரித்து இயக்க இருக்கும் படத்திலும் லக்‌ஷனா ரிஷியை குழந்தை நட்சத்திரமாக நடிக்க வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார். ஏவிஎம்-ன் ‘முதல் இடம்’ படத்தை இயக்கிய ஆர்.குமரன் உருவாக்கும் புதிய படத்திலும் லக்‌ஷனா ரிஷியை நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. நடிகர் ஜெய் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தை தயாரிக்கும் நிறுவனமும் லக்‌ஷனா ரிஷியை தங்களது படத்தில் நடிக்க வைக்க விருப்பம் தெரிவித்துள்ளது.

 

Lakshana Rishi with Bagyaraj

 

இசை ஆல்பம் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கி திரையுலகின் கவனத்தை ஈர்த்திருக்கும் லக்‌ஷனா ரிஷி, 3 வயதிலேயே திருக்குறள் மற்றும் சிலப்பதிகாரத்தை மனப்பாடமாக சொல்லக்கூடிய ஆற்றல் பெற்றவர். மேலும், பல யூடியுப் சேனல்களில் ‘ருசியா சமைப்பது எப்படி?’ என்று நேரடியாக சமைத்துக்காட்டி அசத்தி வருகிறார். அதேபோல், திரைப்படங்களைப் பார்த்தால் அதில் நடித்திருப்பதை போல் அப்படியே நடித்தும், நடனமாடும் திறன் படைத்தவராகவும் திகழ்பவர், விஜய், தனுஷ், விஜய் சேதுபதி ஆகியோர் தான் தனது பேவரைட் ஹீரோக்கள் என்கிறார்.

 

திருச்சியை அடுத்துள்ள பெரம்பலூரில் உள்ள கோல்டன் கேட்ஸ் வித்யாஸ்மரத்தில் முதல் வகுப்பு படித்து வரும் லக்‌ஷனா ரிஷி, விரைவில் கோலிவுட்டை கலக்கும் குட்டி நட்சத்திரமாக ஜொலிக்கப் போவது உறுதி என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறார். 

 

அதே சமயம், தமிழ்த் திரையுலகில் குழந்தை நட்சத்திரங்களாக அறிமுகமாகி பின்னாளில் பிரபலமான கலைஞர்களாக உயர்ந்தவர்கள் போல் தனது மகள் லக்‌ஷனா ரிஷியையும் பிரபலமான குழந்தைநட்சத்திரமாக உருவாக்குவதே எங்கள் லட்சியம் என்கிறார்கள் குழந்தை நட்சத்திரத்தின் பெற்றோர் டாக்டர்.எஸ்.வி.ரிஷி - அனீஷா சதீஷ்.

Related News

10060

துல்கர் சல்மானை நடிப்பு சக்கரவர்த்தியாக மக்கள் கொண்டாடுவார்கள் - நடிகர் ராணா பாராட்டு
Thursday November-06 2025

இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...

சினிமாவில் வெற்றி பெற 4 விசயங்கள் அவசியம்! - இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்
Thursday November-06 2025

பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...

’ஆர்யன்’ பட கிளைமாக்ஸ் மாற்றம்! - வெற்றி விழாவில் படக்குழு தகவல்
Wednesday November-05 2025

அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

Recent Gallery