’இறுதி முயற்சி’ படத்தின் டீசரை வெளியிட்டு பாராட்டிய கே.பாக்யராஜ்!
Monday September-30 2024

இயக்குநரும் நடிகருமான ராதாகிருஷ்ணன் பார்த்திபனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய வெங்கட் ஜனா எழுதி இயக்கியிருக்கும் படம் ’இறுதி முயற்சி’. வரம் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ரஞ்சித், மெகாலி மீனாட்சி, விட்டல் ராவ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

 

சாதாரண பெட்டி கடை வைத்திருப்பவர் முதல் பல கோடிகளில்  வணிகம் செய்யும் பெரும் தொழில் அதிபர்களும் சந்திக்கும் ஒரு பிரச்சினையை நெஞ்சத்தை பதை பதைக்க  வைக்கும் வகையில் சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானரில் திரைக்கதை அமைத்து அனைத்து தரப்பு மக்களும் குடும்பத்தினருடன் ரசித்து பார்க்கும் விதமாகவும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் உருவாகியுள்ள இப்படத்தின் டீசரை இயக்குநரும் நடிகருகான கே.பாக்யராஜ் வெளியிட்டு படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.

 

வெளியான சில மணி நேரங்களில் மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள ‘இறுதி முயற்சி’ டீசர் சமூக வலைதளங்கள் மற்றும் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

 

சூர்யா கார்த்திக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு சுனில் லாசர் இசையமைத்துள்ளார். வடிவேல் விமல் ராஜ் படத்தொகுப்பு செய்ய, பாபு எம்.பிரபாகர் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். மஷீக் ரஹ்மான் பாடல்கள் எழுத, அரவிந்த் கார்னீஸ் பாடல்களை பாடியுள்ளார். 

 

இறுதி முயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்ற‌ நிலையில், இறுதி கட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது , விரைவில் படத்தின் இசை மற்றும் திரையரங்கு வெளியீடு பற்றிய அறிவிப்பு அதிகார பூர்வவமாக வெளியாகும்.

Related News

10064

’தாய் கிழவி’ மூலம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன் - சிவகார்த்திகேயன்
Wednesday March-11 2026

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...

உண்மை சம்பவத்தை இரத்தமும் சதையுமாக சொல்லும் ‘மனிதன் தெய்வமாகலாம்’!
Tuesday March-10 2026

வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...

நயன்தாராவை கெளரவித்த ‘பேட்ரியாட்’ படக்குழு!
Tuesday March-10 2026

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில்  நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...

Recent Gallery