Latest News :

எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘கோடித்துணி’ சிறுகதையை தழுவி உருவாகியுள்ள ‘அங்கம்மாள்’!
Sunday October-06 2024

பிரபல எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ‘கோடித்துணி’ என்கின்ற சிறுகதையை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் "அங்கம்மாள்". இப்படம்  மும்பை திரைப்பட விழாவில் (MAMI) தெற்காசிய பிரிவின் கீழ் திரையிட அதிகாரப்பூர்வமாக தேர்வாகியுள்ளது. 

 

பெருமாள் முருகன் எழுதிய சிறுகதைகளில் ஒன்று திரைப்படமாக மாறுவதும், அது குறிப்பிடத்தக்க அங்கீகாரத்தை பெறுவதும் இதுதான் முதல் முறை. விபின் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ள அங்கம்மாள் படத்தை என்ஜாய் பிலிம்ஸ் சார்பில் நடிகரும் பாடகருமான பிரோஸ் ரஹீம் மற்றும் அஞ்சாய் சாமுவேல் ஆகியோர் தயாரித்துள்ளார். படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரும் ஒளிப்பதிவாளருமான அஞ்சாய் சாமுவேல் இந்தப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். பெருமாள் முருகனின் ‘கோடித்துணி’-க்கு புதிய உருவத்தை தரும் விதமாக அங்கம்மாள்  உருவாகியுள்ளது.

 

Angammal

 

கீதா கைலாசம், சரண், பரணி, தென்றல் ரகுநந்தன், முல்லையரசி, பேபி யாஸ்மின் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். 

 

பெருமாள் முருகனின் ‘கோடித்துணி’ மிகப்பெரிய அளவில் அங்கீகாரங்களையும் பாராட்டுக்களையும் பெற்ற சிறுகதை. இந்தக்கதையை தழுவி எடுக்கப்பட்டுள்ள இந்தப்படம் விரைவில் ரசிகர்களின் பார்வைக்கு வர இருக்கிறது. மேலும் உலக திரைப்பட விழாக்களுக்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News

10080

ஏவிஎம் சரவணன் மறைவு - முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி
Thursday December-04 2025

தமிழ் சினிமாவின் புகழ் பெற்ற மற்றும் பழமையான தயாரிப்பு நிறுவனமான ஏ...

வைரலான ‘வா வாத்தியார்’ படத்தின் ரீமிக்ஸ் பாடல்!
Tuesday December-02 2025

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே...

100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து சாதனை படைத்த ‘ரேகை’ தொடர்!
Tuesday December-02 2025

இந்தியாவின் முன்னணி ஓடிடித் தளமான ஜீ 5 - ல் கடந்த நவம்பர் 28 ஆம் தேதி வெளியான ’ரேகை’ இணையத் தொடர் ரசிகர்களின் பெரும் வரவேற்பில், வெளியான சில நாட்களில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது...

Recent Gallery