ஜெயம் ரவி நடிப்பில், இயக்குநர் ராஜேஷ்.எம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பிரதர்’ திரைப்படம் தீபாவளி வெளியீடாக வெளியாக உள்ள நிலையில், அவரது புதிய படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜெயம் ரவியின் 34 வது திரைப்படமாக உருவாகும் இப்படத்தை ‘டாடா’ பட புகழ் இயக்குநர் கணேஷ் கே.பாபு இயக்குகிறார்.
ஜெயம் ரவியின் ‘அகிலன்’ மற்றும் விரைவில் வெளியாக உள்ள ‘பிரதர்’ ஆகிய படங்களை தயாரித்துள்ள ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனம் இப்படத்தின் மூலம் மூன்றாவது முறையாக ஜெயம் ரவியுடன் கைகோர்த்துள்ளது. ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனத்தின் சார்பில் சுந்தர் ஆறுமுகம் தயாரிப்பில் உருவாகும் இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்திற்கு தற்காலிகமாக ‘ஜெ ஆர் 34’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
'பிரதர்' திரைப்படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள பாடல்கள் பெரும் வரவேற்பு பெற்றுள்ள நிலையில் 'ஜெ ஆர் 34' திரைப்படத்திற்காக ஸ்கிரீன் சீன் மீடியா மற்றும் ஜெயம் ரவியுடன் ஹாரிஸ் ஜெயராஜ் மீண்டும் கைகோர்க்கிறார்.
இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் உள்ளிட்ட தகவல்களை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ள நிலையில், படப்பிடிப்பை டிசம்பர் மாதம் தொடங்க திட்டமிட்டிருப்பதாக தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது.
ழகரம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில், நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஜித்து மாதவன் கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படமான ‘சூர்யா 47’ படப்பிடிப்பு நேற்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது...
இயக்குநர் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சின்ன சின்ன ஆசை' எனும் திரைப்படத்தில் நடிகை மதுபாலா மற்றும் நடிகர் இந்திரன்ஸ் ஆகியோர் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கிறார்கள்...
மும்பை, டிசம்பர் 2025: இந்த ஆண்டின் மிகப்பெரிய பான்-இந்தியா திரைப்பட கையகப்படுத்தல் ஒப்பந்தங்களில் ஒன்றான பனோரமா ஸ்டுடியோஸ், பென் ஸ்டுடியோஸுடன் இணைந்து ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்திருக்கும் மலையாளத் திரைப்படமான ’த்ரிஷ்யம் 3’ இன் உலகளாவிய திரையரங்கு மற்றும் டிஜிட்டல் உரிமைகளைப் பெற்றுள்ளது...