கெளபாய்ஸ், நாடோடி வீரர்கள், கோஸ்ட்பஸ்டர்ஸ் அல்லது புதையல் வேட்டையாடுபவர்கள் பற்றிய படங்களே பொதுவாக சாகச படங்களாகக் கருதப்படுகின்றன. இருப்பினும், திருமணமான சாதாரண குடும்பஸ்தனின் அன்றாட வாழ்க்கையும் சாகசங்களுக்குக் குறைந்ததல்ல, அந்த வகையில் ஒவ்வொரு குடும்பஸ்தனும் ஒரு சாகச வீரனே !
ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், சினிமாகாரன் எஸ்.வினோத் குமார் தயாரிப்பில், ஒரு இளைஞன் குடும்ப வாழ்வில் எதிர்கொள்ளும் சவால்களும் சாகசங்களும் பல இயல்பான வேடிக்கை நிறைந்த தருணங்கள் கொண்ட விறுவிறுப்பான திரைப்படமாக உருவாகியிருக்கிறது. மணிகண்டன் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் புதிய திரைப்படத்திற்கு ‘குடும்பஸ்தன்’ என்று பெயரிட்டுள்ளனர்.
ஒவ்வொரு படத்திலும் தனது அசத்தலான நடிப்பின் மூலம் தன்னுடைய ரசிகர்கள் கூட்டத்தை அதிகரித்துக் கொண்டே செல்கிறார் நடிகர் மணிகண்டன். ‘குட் நைட்’ மற்றும் ‘லவ்வர்’ ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, தயாரிப்பாளர் எஸ் வினோத் குமார் மற்றும் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமியுடன் இந்தப் படத்தில் மணிகண்டன் இணைந்துள்ளார்.
படம் குறித்து இயக்குநர் ராஜேஷ்வர் கூறும்போது, “கோயம்புத்தூரில் இருக்கும் புதிதாக திருமணமான தம்பதிகள் பற்றிய மகிழ்வான கதை இது. குடும்பஸ்தன் ஒருவன் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் வேடிக்கையான தருணங்களை சுற்றி இந்தக் கதை நடக்கிறது” என்றார்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்த நிலையில், விரைவில் படத்தை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
சான்வே மேகனா, குரு சோமசுந்தரம், இயக்குநர் ஆர். சுந்தர்ராஜன், பிரசன்னா பாலச்சந்திரன், ’ஜெய ஜெய ஜெய ஹே’ படப்புகழ் கனகம்மா, ஜென்சன் திவாகர் மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...