Latest News :

உலக சாதனை படைத்த நடிகர் அஜித்குமார் நிறுவனம்!
Tuesday October-08 2024

நடிகர் அஜித்குமார் மோட்டார் பந்தய விளையாட்டுகளில் ஆர்வம் உள்ளவர் என்பதோடு, அதில் பங்கேற்கும் வீரர் என்பது அனைவரும் அறிந்தது தான். தனது மோட்டார் பந்தய விளையாட்டுக்கு சற்று விடுமுறை விட்டிருந்த அஜித்குமார், தற்போது அதில் மீண்டும் ஈடுபட தொடங்கியுள்ளார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தனது தொழில்முறை மோட்டார் பந்தய அணியை அறிமுகப்படுத்தினார். இதற்கு முன்பாக ‘வீனஸ் மோட்டார் சைக்கிள் டூர்ஸ்’ என்ற பெயரில் இருசக்கர வாகன சுற்றுலா நிறுவனம் ஒன்றை நிறுவினார். 

 

இந்த நிறுவனம் மூலம் இந்தியாவை கடந்து பல்வேறு இருசக்கர வாகன பயணங்களை வடிவமைத்து வரும் அஜித் தற்போது இந்த துறையில் உலக சாதனை படைத்திருக்கிறார். ஆம், அஜித்தின் வீனர் மோட்டார் சைக்கிள் டூர்ஸ் நிறுவனம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் இதுவரை இல்லாத மிகப்பெரிய ஹார்லி-டேவிட்சன் மோட்டார் சைக்கிள் ரைட் ஏற்பாடு செய்ததற்காக மதிப்புமிக்க உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. ஐலேண்ட் ரம்பிள் என்று அழைக்கப்படும் இந்த வரலாற்று நிகழ்வில், ஹார்லி-டேவிட்சன் மோட்டார் சைக்கிள்கள் தீவுகளில் பயணித்தது அனைவரையும் ஈர்த்தது.

 

இந்தியா, ஸ்காட்லாந்து, போர்ச்சுகல், வியட்நாம், தாய்லாந்து, அரேபியன் ஒடிஸி (யுஏஇ, ஓமன்), பெஸ்ட் ஆஃப் ஆல்ப்ஸ் (ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, இத்தாலி) போன்ற சிலிர்ப்பான நாடு கடந்த பயணங்களையும் அஜித்தின் வீனஸ் மோட்டார்சைக்கிள் டூர்ஸ் வழி நடத்தியுள்ளது. ஒவ்வொரு பயணமும் கவனத்துடன் திட்டமிடப்பட்டுள்ளது. பயணத்தில் ரைடர்ஸ் இயற்கைக்காட்சிகள் மற்றும் இதுவரை பார்க்காத இடங்கள் என இரண்டிலும் சிறந்த அனுபவத்தை பெற உறுதி செய்கிறது. மோட்டார் சைக்கிள் பயணம் மட்டுமல்லாது கூடுதலாக கார் மற்றும் சைக்கிள் பயணங்களுடன் வீனஸ் மோட்டார் சைக்கிள் Tours ஒவ்வொரு வகையான பயணிகளுக்கும் ஒரு சாகசத்தை உறுதி செய்கிறது.

 

அந்தமானின் ரம்பிள் தீவில் ஹார்லி-டேவிட்சன் நிகழ்வில் அஜித்குமாரின்  'வீனஸ் மோட்டார்சைக்கிள் Tours’ நிறுவனத்தின் இந்த சமீபத்திய முயற்சி சாதனை படைத்தது. ஹார்லி-டேவிட்சன் மெரினா பிரிவு, சென்னை மற்றும் ஹார்லி-டேவிட்சன் பஞ்சாரா பிரிவு, ஹைதராபாத் ஆகியவற்றுடன் இணைந்து வீனஸ் மோட்டார்சைக்கிள் டூர்ஸ் இந்த நிகழ்வை அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் நடத்தியது. ஹார்லி-டேவிட்சன் மோட்டார்சைக்கிள்கள் மூலம் போர்ட் பிளேர் வழியாக சவாரி செய்து, மறக்க முடியாத பயணத்தை உருவாக்கியது.

 

இந்த ரம்பிள் தீவு பயணத்தின் த்ரில்லோடு அந்தமான் தீவுகளின் கண்கொள்ளா அழகையும் ரைடர்களுக்குக் கொடுத்து வருகிறது வீனஸ் மோட்டார் சைக்கிள் டூர்ஸ். இந்த வரலாற்று நிகழ்வு எல்லைகளைக் கடந்து புதிய பயண அனுபவங்களை உருவாக்குகிறது.

 

இந்த நிகழ்வு வீனஸ் மோட்டார்சைக்கிள் டூர்ஸ் நிறுவனத்திற்கு ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது மட்டுமல்லாது, இந்தியாவின் வளர்ந்து வரும் மோட்டார் சைக்கிள் சுற்றுலா துறையின் திறனையும் எடுத்துக்காட்டுகிறது.

Related News

10100

தென்னிந்தியாவின் முதல் பான் இந்தியா இசை ஆல்பம் ‘ஹார்ட்குல்ல’ (Heartkulla)!
Thursday April-02 2026

தென்னிந்தியாவில் சுயாதீன பாடல்களுக்கான வரவேற்பு அதிகரித்து வரும் நிலையில், இளைஞர்களை கவரும் துள்ளல் மற்றும் காதல் பாடலாக உருவாகியுள்ளது ‘ஹார்ட்குல்ல’ (Heartkulla)...

’யூத்’ திரைப்பட நன்றி அறிவிப்பு விழா!
Wednesday April-01 2026

பார்வதா என்டர்மெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் கருப்பையா சி...

’லீடர்’ படத்தை பாராட்டிய தனுஷ், வெற்றிமாறன்! - உற்சாகத்தில் சரவணன்
Wednesday April-01 2026

லெஜெண்ட் சரவணன் முதன்மை வேடத்தில் நடிக்க, ஆர்...

Recent Gallery