கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8 வது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். இந்த சீசனின் ஒளிபரப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில், இந்தியில் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 18 வது சீசனும் தற்போது தொடங்கியுள்ளது. பல பாலிவுட் பிரபலங்கள் போட்டியாளர்களாக பங்கேற்றிருக்கும் ஹிந்தி பிக் பாஸ் - சீசன் 18 நிகழ்ச்சியில் தமிழ் சினிமா நடிகை ஸ்ருதி அர்ஜுன் பங்கேற்று கவனம் ஈர்த்திருக்கிறார்.
கடந்த 2006 ஆம் ஆண்டு தொடங்கிய ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் இதுவரை தமிழகத்தைச் சார்ந்தவர்கள் பங்கேற்றது இல்லை, என்ற பிம்பித்தை உடைக்கும் விதமாக ஸ்ருதி அர்ஜுன் தற்போது அங்கு போட்டியாளராக களம் இறங்கியிருக்கிறார்.
ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல் தமிழக பிரபலம் என்ற பெருமையை பெற்றிருக்கும் ஸ்ருதி அர்ஜுன், மறைந்த பழம்பெரும் நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தி ஆவார். நடிகர் சூர்யாவின் ‘ஸ்ரீ’ திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர், தொடர்ந்து ‘தித்திக்குதே’, ‘நளதமயந்தி’ போன்ற படங்களில் நாயகியாக நடித்தார். திருமணத்திற்குப் பிறகு நடிப்புக்கு ஓய்வு கொடுத்தவர், தற்போது மீண்டும் கலைத்துறையில் கால்பதித்திருக்கிறார். விஜய் தொலைக்காட்சியின் குக் வித் கோமாளி - சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு தனது குறும்புத்தனமான குணத்தினால் மக்கள் மனதை கவர்ந்தவர், தொடர்ந்து பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தவர், தற்போது ஹிந்தி பிக் பாஸ் - சீசன் 18 நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கி கவனம் ஈர்த்துள்ளார்.
தமிழகத்தில் இருந்து அவர் வெற்றிபெற சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்த ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியை கலர்ஸ் தொலைக்காட்சி தினமும் இரவு பத்து மணிக்கு ஒளிபரப்பு செய்கிறது, ஜியோ சினிமா வலைத்தளம் இந்நிகழ்ச்சியை 24 மணி நேரமும் ஒளிபரப்பு செய்கிறது.
முதல் நாள் எபிசோடில் ஸ்ருதிகா தனது காதல் கதையை சக போட்டியாளர்களிடம் கூறும் ப்ரோமா மக்களின் அன்பைப் பெற்று வருகிறது.ஸ்ருதிகா, தொடர்ந்து விளையாடி 100 நாட்களை வெற்றிகரமாக முடித்து டைட்டில் வின்னராக வாழ்த்துவோம்.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...