Latest News :

கல்வியைப் பற்றிய அழுத்தமான படைப்பு ’சார்’! - சீமான் பாராட்டு
Friday October-11 2024

நடிகரும் இயக்குநருமான போஸ் வெங்கட் இயக்கத்தில், விமல் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘சார்’. எஸ்.எஸ்.எஸ் பிக்சர்ஸ் சார்பில் சிராஜ்.எஸ் தயாரித்திருக்கும் இப்படம் கல்வியின் அவசியத்தை உணர்த்தும் சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ளது. 

 

வரும் அக்டோபர் 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோக்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதோடு, படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்பட்டுத்தியுள்ளது. நடிகர் போஸ் வெங்கட் தான் இயக்கிய முதல் படமான ‘கன்னி மாடம்’ மூலம் சமூக பிரச்சனையை திரை மொழியில் சிறப்பாக பேசியது போல், இந்த படத்தில் கல்வியின் அவசியத்தையும், அதை மக்களிடம் கொண்டு செல்ல முடியாமல் தடுத்த சில மூட நம்பிக்கைகளையும் மிக நேர்த்தியாக பேசியிருக்கிறார்.

 

இந்த நிலையில், சமீபத்தில் ‘சார்’ திரைப்படத்தை பார்த்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், படத்தையும், இயக்குநர் போஸ் வெங்கட், நடிகர் விமல் உள்ளிட்ட படக்குழுவினர்களையும் வெகுவாக பாராட்டியுள்ளார். 

 

படம் குறித்து சீமான் கூறுகையில், “ன் அன்புக்குரிய தம்பி நடிகர் போஸ் வெங்கட் அவர்கள், அவரை நடிகராகத் தான் பார்த்திருக்கிறோம். என்னுடைய அப்பா பாரதிராஜாவின் ஈரநிலம் திரைப்படத்தில் நன்றாக  நடித்திருந்தார், ஆனால் இயக்குநராக அவரது இரண்டாவது படம் ’சார்’. எஸ்.எஸ்.எஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் இளைஞர்கள் இணைந்து, இப்படத்தைத் தயாரித்திருக்கிறார்கள்.  கல்வி மறுக்கப்பட்ட சமூகத்திலிருந்து நாங்கள் எல்லாம் கற்று,  இவ்வளவு தூரம் வந்திருக்கிறோம்.  பல கிராமங்களில் எங்களது பெற்றோர்கள், எல்லாம் 50 கிலோமீட்டர் தாண்டி, பயணித்ததே இல்லை. அப்படி இருக்கும் இந்த வேளையில் பழமைவாத நம்பிக்கைகள், அறிவை வளர்க்கும் இந்த கல்வியை, உள்ளே விடாமல் தடுக்கிறது, எவ்வளவு இடையூறாக இருக்கிறது, முட்டுக்கட்டை போடுகிறது, என்பதை மிக ஆழமாக, அழுத்தமாகத் தம்பி இந்த திரைப்படத்தில் எடுத்துக் காட்டி இருக்கிறார். 

 

இந்தப் படத்தில் நடித்திருக்கும் நடிகர் விமல், தம்பி சரவணன், எல்லோரும் அற்புதமாக நடித்திருக்கிறார்கள். பள்ளி மாணவர்களாக நடித்திருக்கும் அந்த சிறுவர்கள், இத்தனை சின்ன வயதில், எப்படி இத்தனை அழகான நடிப்பைத் தந்தார்கள், என்பதும் எப்படி நடிக்க வைத்தார் என்பதும் ஆச்சரியமாக இருக்கிறது. 

 

பழமை வாதத்தை உடைத்து, கல்வியை நம் மக்களிடம் சொல்லிக் கொண்டு செல்ல, நம் முன்னோர்கள் எவ்வளவு உழைத்திருக்கிறார்கள் என்பதை, இந்த திரைப்படம் வெகு அழகாக எடுத்துக்காட்டுகிறது. மருத்துவம் போய்ச் சேராத மக்களுக்கு எப்படி சேகுவாரா மருத்துவத்தைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று நினைத்தாரோ,  அதேபோல் கல்வி அறியாத மக்களுக்குக் கல்வியைக் கொண்டு சேர்க்க நினைக்கும், ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியர், அவருடைய மகன், அவருடைய பேரன் என மூன்று தலைமுறை செய்த சேவை தான் இந்த திரைப்படம். இறுதியாகத் திரைப்படத்தை ஆசிரியர்களுக்குச் சமர்ப்பணம் செய்யும் அவருடைய குரலே  நமக்கு  சிலிர்ப்பூட்டுகிறது. 

 

நம் தாய் பத்து மாதம், நம்மைக் கருவறையில் சுமந்தாள் ஆனால் ஆசிரியர் பெருமக்கள் 20 ஆண்டுகள் கல்விக் கருவறையில் நம்மை சுமக்கிறார்கள், என்பதைப்  போஸ் வெங்கட் இப்படத்தில் மிக அழுத்தமாகச் சொல்லி இருக்கிறார். ஒரு நடிகராக அவரை நமக்குத் தெரியும், ஒரு மிகச்சிறந்த படைப்பை உருவாக்கும் படைப்பாளனாக, இந்த திரைப்படம், அவரை உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும்.  தம்பி போஸ் வெங்கட் அவர்களுக்கும், படத்தில் நடித்த கலைஞர்கள், தொழில் நுட்ப வல்லுநர்கள் அனைவருக்கும் இப்படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர்கள் அனைவருக்கும், என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற என் இனிய வாழ்த்துக்கள்.” என்றார்.

 

Seeman and siraj

 

இனியன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு சித்து குமார் இசையமைத்துள்ளார். ‘போர்த்தொழில்’ படத்திற்கு படத்தொகுப்பு செய்த ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பு செய்துள்ளார். பாரதி கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

 

இயக்குநர் வெற்றி மாறனின் கிராஸ் ரூட் நிறுவனம் வழங்கும் ‘சார்’ திரைப்படத்தை மிகப்பெரிய வெற்றிப் படங்களை வெளியிட்டு வரும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது.

Related News

10104

”’பீனிக்ஸ்’ நாயகன் சூர்யாவுக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது” - இயக்குநர் அனல் அரசு புகழாரம்
Saturday July-12 2025

இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...

திரைப்பட தயாரிப்பில் இறங்கிய 'நாய்ஸ் அண்டு கிரைன்ஸ்'!
Saturday July-12 2025

திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ள இந்தியாவின் முன்னணி ஊடகத் தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைப்பட தயாரிப்பில் களம் இறங்குகிறது...

தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘மார்ஷல்’!
Saturday July-12 2025

‘டாணாக்காரன்’ பட புகழ் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்திற்கு ‘மார்ஷல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது...

Recent Gallery