‘பில்லா பாண்டி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமானவர் கே.சி.பிரபாத். அப்படத்தை தயாரித்ததோடு வில்லன் வேடத்திலும் நடித்து கவனம் ஈர்த்தவர், தொடர்ந்து ‘தேவராட்டம்’, ‘புலிக்குத்தி பாண்டி’, ‘அங்காரகன்’ போன்ற படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்து வருபவர் தற்போது கதாநாயகன் அவதாரம் எடுத்துள்ளார்.
கே.சி.பிரபாத் நாயகனாக அறிமுகமாகும் படத்திற்கு ‘கருப்பு பெட்டி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் விளம்பர பணிகளில் தீவிரம் காட்டி வரும் படக்குழுவினர் படம் தொடர்பாக வெளியிட்டு வரும் போஸ்டர்களும், புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி கவனம் ஈர்த்து வருகிறது. குறிப்பாக, நாயகன் கே.பி.பிரபாத் மற்றும் கதாநாயகி இருவரும் கைவிலங்குடன் நீதிமன்றத்தில் நிற்பது போன்ற புகைப்படங்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்திருக்கிறது.
போஸ்டரின் பின்னணியில் நீதிமன்றம் இருந்தாலும், முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்தும் கொடுக்கப்பட்டிருக்கும் இப்படம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்துடன் பார்க்க கூடிய பொழுதுபோக்கு படமாக இருக்கும், என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
கே.பி.பிரபாத் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் சரவண சக்தி, சித்தா ஆர்.தர்ஷன், தேவிகா வேணு, அனிதா, கீர்த்தி, நிஷா, சர்மிளா, கண்ணன், ராஜதுரை, சிற்றரசு, காமராஜ், சாய் வைரம் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
கே.சி.பி புரொடக்ஷன்ஸ் சார்பில் கே.சி.பி.மிதுன் சக்கரவர்த்தி தயாரித்திருக்கும் இப்படத்தின் கதை எழுதி எஸ்.தாஸ் இயக்கியிருக்கிறார். அருண் இசையமைக்க, சிற்றரசு பாடல்கள் எழுதியுள்ளார். ஆர்.மோசச் டேனியல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பாலசிவா படத்தொகுப்பு செய்துள்ளார். திவாகர் கலை இயக்குநராக பணியாற்ற ரவி ராஜா சண்டைக்காட்சிகளையும், மாஸ்டர் சக்ரவர்த்தி நடனக் காட்சிகளையும் வடிவமைத்துள்ளனர்.
வரும் அக்டோபர் 18 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘கருப்பு பெட்டி’ படத்தை கே.சி.பி.புரொடக்ஷன்ஸ் வெளியிடுகிறது.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...