Latest News :

பிடிஜி யுனிவர்சல் நிறுவனத்துடன் கைகோர்த்த நடிகர் ஜெயம் ரவி!
Monday October-14 2024

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள ‘பிரதர்’ படம் தீபாவளியன்று வெளியாக உள்ள நிலையில், அவர் அடுத்தடுத்து நடிக்கும் படங்களின் அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில், தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக உருவெடுத்து வரும் பிடிஜி யுனிவர்சல் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜெயம் ரவி இரண்டு படங்களில் நடிக்க உள்ளார்.

 

தமிழ் திரையுலகில் கால் பதித்து பல வித்தியாசமான படங்களை பிரம்மாண்டமாக தயாரித்து வரும் BTG Universal நிறுவனம், 20 வருடங்களை கடந்து தமிழ் சினிமாவில் ஜொலிக்கும் முன்னணி நட்சத்திர நடிகர் ஜெயம் ரவியுடன் கூட்டணி அமைத்துள்ளது. 

 

டேட்டா பிரைவசி ஸ்பேஸ், சைபர் தடயவியல் உட்பட மென்பொருள் துறையில் உலகளாவிய  அளவில் ஜாம்பவானாக கோலோச்சும் திரு.பாபி பாலச்சந்திரன்,  BTG Universal நிறுவனம்  மூலம் தமிழ் திரைத்துறையில் கால் பதித்துள்ளார். பல முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் தலைமை நிர்வாக இயக்குநராக பணியாற்றிய திரு டாக்டர் M.மனோஜ் பெனோ தற்போது BTG Universal நிறுவனத்தின் தலைமை திட்ட இயக்குநராக பொறுப்பேற்று நிறுவனம் மற்றும் திரைப்படங்களின் படைப்பாற்றல் மற்றும் அனைத்து நிர்வாகப் பணிகளையும் செய்து வருகிறார். இந்நிறுவனம் சின்ன படம், பெரிய படம் என்று பாராமல் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தயாரிக்க முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக மக்களுக்கு பிடித்தவாறு உருவாகும் படங்களை கொடுக்க இருக்கிறார்கள்.

 

முன்னதாக இந்நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில்,  அருள்நிதி நடிப்பில் வெளியான ஹாரர் திரைப்படமான ‘டிமான்ட்டி காலனி 2’ ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்றது.  அடுத்ததாக இயக்குநர் விக்ரம் ராஜேஸ்வர் இயக்கத்தில் நடிகர்கள்  வைபவ் மற்றும் அதுல்யா நடிப்பில் காமெடி கலாட்டாவாக உருவாகியுள்ள ’சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்’ திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. 

 

இந்நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக நட்சத்திர நடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே படப்புகழ் இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில், ’ரெட்டதல’ படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இந்நிலையில் இந்நிறுவனம் அடுத்ததாக ஜெயம்ரவியை வைத்து பிரம்மாண்ட கமர்ஷியல் படங்களை உருவாக்கவுள்ளது. 

 

தமிழ் திரையுலகில் ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் ஜெயம் ரவி 20  ஆண்டுகளை கடந்து முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார். வித்தியாசமான கதைகளங்களில், மாறுபட்ட பாத்திரங்களில் பல வெற்றிப்படங்களை தந்து ரசிகர்களின் விருப்பமிகு நாயகனாக, குடும்பங்கள் கொண்டாடும் முன்னணி நட்சத்திரமாக வலம் வருகிறார்.  

 

ரசிகர்கள்  ஜெயம் ரவியின் அடுத்த படம் குறித்து ஆவலுடன் எதிர்பார்த்து வந்த நிலையில் BTG Universal நிறுவனத்தின் தயாரிப்பில் அவர் நடிக்க உள்ள படத்தின் அறிவிப்பு வெளியாகியிருப்பது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

 

புதிய படங்களின் இயக்குநர்கள், நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் படங்களின்  தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாக இருக்கிறது.

Related News

10106

துல்கர் சல்மானை நடிப்பு சக்கரவர்த்தியாக மக்கள் கொண்டாடுவார்கள் - நடிகர் ராணா பாராட்டு
Thursday November-06 2025

இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...

சினிமாவில் வெற்றி பெற 4 விசயங்கள் அவசியம்! - இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்
Thursday November-06 2025

பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...

’ஆர்யன்’ பட கிளைமாக்ஸ் மாற்றம்! - வெற்றி விழாவில் படக்குழு தகவல்
Wednesday November-05 2025

அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

Recent Gallery