’பவர் லட்டு’ மூலம் மீண்டும் பவன் கல்யாணை சீண்டுகிறாரா பவர் ஸ்டார் சீனிவாசன்!
Monday October-14 2024

கடந்த 2010 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான சீனிவாசன் ‘பவர் ஸ்டார்’ என்ற பட்டத்தை தனக்கு தானே கொடுத்துக் கொண்டு மிகப்பெரிய அட்ராசிட்டியை உருவாக்கினார். பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தவர், ‘லத்திகா’ என்ற படத்தை தயாரித்து, நாயகனாக நடித்ததோடு, தனது சொந்த பணத்தின் மூலம் மிகப்பெரிய விளம்பரம் செய்து அப்படத்தை 100 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓட்டினார். இதையடுத்து சந்தானத்துடன் இணைந்து ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தில் நடித்தவர், அப்படத்திற்குப் பிறகு தமிழ் சினிமாவில் முக்கியமான காமெடி நடிகராக உயர்ந்தார்.

 

நடிப்பு மற்றும் நகைச்சுவை வருகிறதோ இல்லையோ, பவர் ஸ்டார் இருந்தால் போதும், என்ற நிலையில் ஏகப்பட்ட படங்களில் பிஸியாக நடித்த சீனிவாசனின் பவர் ஸ்டார் என்ற பட்ட பெயரும் பிரபலமாகி விட்டது. இணையத்தில் பவர் ஸ்டார் என்று தேடினாலே சீனிவாசனின் புகைப்படங்கள் தான் வரும். ஆனால், இந்த படத்தை முதன் முதலில் பயன்படுத்தியவர் தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் தான். காலப்போக்கில் அவரை விட சீனிவாசனுக்கு தான் பவர் ஸ்டார் என்ற பட்டம் பொருந்தியதோடு, இணையத்தில் பவர் ஸ்டார் என்றாலே சீனிவாசனின் புகைப்படங்கள் தான் ஆட்கொண்டதால், பவன் கல்யாணின் ரசிகர்கள் அப்செட்டாகி விட்டார்கள். இது குறித்து ஆந்திராவில் அவர்கள் அழுது புரண்ட சம்பவங்களும் நடந்திருக்கிறது.

 

இப்படி பவன் கல்யாணை பவர் ஸ்டார் என்ற பட்ட பெயர் மூலம் சீண்டிய நம்ம ஊர் பவர் ஸ்டார் சீனிவாசன், தற்போது லட்டு மூலம் மீண்டும் பவன் கல்யாணை சீண்டும் விதமாக தனது புதிய படத்திற்கு ‘பவர் லட்டு’ என்று தலைப்பு வைத்துள்ளார். லட்டு மூலம் நாட்டில் பல சர்ச்சைகள் வெடித்துக் கொண்டிருக்கும் தற்போதைய சூழலில் பவர் ஸ்டார் இயக்கி நாயகனாக நடிக்கும் படத்திற்கு ‘பவர் லட்டு’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

 

எல்.வி.கிரியேஷன்ஸ் சார்பில் டாக்டர்.லோகு மிகப்பெரிய பொருட்செலவில் இப்படத்தை தயாரிக்கிறார். இதற்கு முன்னதாக பவர் ஸ்டார் நடித்த ‘முன்தினம்’ என்ற படத்தை தயாரித்து இயக்கியுள்ளார். அத்திரைப்படம் மிக விரைவில்  வெளிவர உள்ளது. இப்படத்திற்கு கதை திரைக்கதை எழுதியது மனோஜ் கார்த்திக் காமராஜு. இவர் வைஜெயந்தி ஐ பி எஸ் , ப்ருஸ்ட்லீ ரிடர்ன்ஸ் படங்களின் இயக்குனர் ஆவார். வினோத் குமார் ஒளிப்பதிவு மேற்கொள்ள வசந்த் மோகன்ராஜ் இசையமைக்கின்றார். அது மட்டுமின்றி இந்த படத்தை 2S எண்டர்டெயின்மெண்ட் சார்பில் எஸ் வினோத் குமார் வெளியிட உள்ளார். 

 

Power Laddu First Look

 

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை தமிழ் திரைப்பட நகைச்சுவை ஜாம்பவான்களின் ஒருவரான நகைச்சுவை தென்றல் செந்தில் அவர்கள் வெளியிட பவர் ஸ்டாரும் தயாரிப்பாளரும் பெற்று கொண்டனர். அதுமட்டுமின்றி செந்தில் அவர்கள் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

Related News

10107

’தாய் கிழவி’ மூலம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன் - சிவகார்த்திகேயன்
Wednesday March-11 2026

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...

உண்மை சம்பவத்தை இரத்தமும் சதையுமாக சொல்லும் ‘மனிதன் தெய்வமாகலாம்’!
Tuesday March-10 2026

வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...

நயன்தாராவை கெளரவித்த ‘பேட்ரியாட்’ படக்குழு!
Tuesday March-10 2026

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில்  நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...

Recent Gallery