தமிழக - கேரள எல்லைப் பகுதியில் மருத்துவ கழிவுகளில் ஆரம்பித்து விலங்குகள் எச்சம் கழிவுகள் வரை கொட்டப்பட்டு வருவதை தினசரி செய்தியாக பார்த்துக் கொண்டு வருகிறோம். இந்த கழிவுகளால் என்னென்ன ஆபத்து ஏற்படுகிறது என்ற உண்மையை உரக்க சொல்ல வருகிறது ‘அலங்கு’.
‘உறுமீன்’, ‘பயணிகள் கவனிக்கவும்’ ஆகிய படங்களை இயக்கிய எஸ்.பி.சக்திவேல் இயக்கும் இப்படத்தை டிஜி பிலிம் கம்பெனி மற்றும் மேக்னஸ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் முதல் பிரதியை பார்த்த பிரபல விநியோகஸ்தர் பி.சக்திவேலன், தனது சக்தி பிலிம் பேக்டரி மூலம் உலகம் முழுவதும் படத்தை வெளியிடும் உரிமையை பெற்றுவிட்டார்.
படம் குறித்து இயக்குநர் எஸ்.பி.சக்திவேல் கூறுகையில், ”நாய்களை நேசிப்போர் சமூகம் இன்று மிகப்பெரியது. அப்படி மனிதர்களுக்கும், நாய்களுக்கும் இருக்கும் பாசம், உறவு எப்படி ஒரு சம்பவத்தின் மூலம் ஒரு பகையாக, மோதலாக மாறுகிறது. அதன் தொடர்ச்சியாக நடைபெறும் சம்பவங்களின் விறுவிறுப்பே திரைக்கதையின் பிரதானம். இதில், புலம்பெயர்ந்து தொழில் செய்யும் பழங்குடியினரின் வாழ்க்கையையும் பதிவு செய்திருக்கிறேன்.
படத்தின் 95 சதவீதம் அடர்ந்த வனப்பகுதிகளில் படமாக்கி இருக்கிறோம், அதுவே படத்தின் மிகப்பெரிய பலமாக இருக்கும். முற்றிலும் மாறுபட்ட ஒரு திரை அனுபவத்தை தருவதோடு, படத்தில் அதிக அளவில் விலங்குகள் நடித்துள்ள காட்சிகள் இருப்பதால் அனைத்து தரப்பு மக்களும் ரசிக்கும்படியான படமாகவும் இருக்கும்.” என்றார்.
இப்படத்தில் நாயகனாக குணாநிதி நடித்திருக்கிறார். பிரபல மலையாள நடிகர் செம்பன் வினோத் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன் காளி வெங்கட், சரத் அப்பானி, ஸ்ரீரேகா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க, நாய் ஒன்றும் முக்கிய கதாபாத்திரமாக வலம் வருகிறது.
இத்திரைப்படத்தை டி.சபரிஷ் , எஸ்.ஏ.சங்கமித்ரா இணைந்து தயாரித்துள்ளனர். இதற்கு முன் இந்நிறுவனம் ஜி.வி.பிரகாஷ் ,கவுதம் மேனன் நடித்த ’செல்ஃபி’ திரைப்படத்தை தயாரித்திருந்தனர் என்பது குறிப்படத்தக்கது.
தமிழ் சினிமாவில் புதுமுகங்கள் நடித்து, மாறுபட்ட கதைக்களம் கொண்ட பல திரைப்படங்கள் அவ்வபோது வெற்றிபெறுவது வழக்கம், இவ்வருடமும் அதைபோல பல திரைப்படங்கள் வெற்றி பெற்றன. அந்த வரிசையில் ’அலங்கு’ திரைப்படமும் இணையும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
எஸ்.பி.சக்திவேல் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்திற்கு எஸ்.பாண்டிகுமார் ஒளிப்பதிவு செய்ய, அஜீஷ் இசையமைத்துள்ளார். சான் லோகேஷ் படத்தொகுப்பு செய்ய, பி.ஏ.ஆனந்த் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். மோகன்ராஜன், கவின், விஷ்ணு எடவன் பாடல்கள் எழுதியுள்ளனர்.
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...
Strengthening its commitment to advanced cancer diagnosis and treatment, Iswarya Hospital today inaugurated the Iswarya Cancer Centre at its OMR Taramani facility in Chennai...