‘8 தோட்டாக்கள்’ பட இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த் நடிக்கும் புதிய படம் அவரது 40 வது படமாகும். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்திற்கு தற்காலிகமாக ‘சித்தார்த் 40’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ’மாவீரன்’ படத்தை தயாரித்த அருண் விஸ்வா தனது சாந்தி டாக்கீஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கும் இப்படத்தின் இசையமைப்பாளராக பிரபல இசையமைப்பாளர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
நடிகர் சித்தார்த் தனது படங்களுக்கு புதிய இசையமைப்பாளர்களுடன் கைக்கோர்ப்பதில் ஆர்வமாக இருக்கிறார். இந்த முயற்சி அவரது முந்தைய படங்களுக்கும் சிறந்த இசையையும் பாடல்களையும் கொடுத்தது. அந்த வகையில், அவரது 40 வது படத்திலும் புதிய இசையமைப்பாளருடன் கைகோர்க்க நினைத்தவர், அம்ரித் ராம்நாத் உடன் இணைந்துள்ளார்.
'வசீகரா', 'ஒன்றா இரண்டா' போன்ற பாடல்களில் தனது குரல் வளத்தால் நம்மை அலாதியான இசை அனுபவத்தில் திளைக்க வைத்தவரும், ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 'லைஃப் ஆஃப் பை' படத்தில் உலகப்புகழ் பெற்ற பாடலைப் பாடியவருமான பின்னணிப் பாடகி பாம்பே ஜெயஸ்ரீயின் மகன்தான் அம்ரித் ராம்நாத். இசை ஆர்வம் அதிகமுள்ள அம்ரித் 25 வயதில் இசையமைப்பாளராக அறிமுகமானார். திரைப்படங்கள் மற்றும் சுயாதீன ஆல்பங்கள் இரண்டிற்கும் இசையமைத்துள்ளார்.

பிரணவ் மோகன்லால் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த சூப்பர்ஹிட் மலையாளத் திரைப்படமான ’வர்ஷங்களுக்கு சேஷம்’ திரைப்படத்தில் அவர் இசையமைத்த 'நியாபகம்' பாடல் அதிக பாராட்டுகளைப் பெற்றது. இந்தப் பாடல் ஒவ்வொருவரது பிளேலிஸ்ட்டிலும் முதலிடத்தைப் பிடித்தது. மேலும் ’சித்தார்த் 40’ படத்தின் மூலம் தமிழ்த் துறையில் அவர் அறிமுகமாகி இருப்பது பல நல்ல பாடல்களை தரும் என உறுதியாக நம்பலாம்.
’சித்தார்த் 40’ படம் திட்டமிட்டபடி சிறப்பாக உருவாகி வருவது படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. படம் குறித்தான அடுத்தடுத்தத் தகவல்களை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிடும்.
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...
Strengthening its commitment to advanced cancer diagnosis and treatment, Iswarya Hospital today inaugurated the Iswarya Cancer Centre at its OMR Taramani facility in Chennai...