Latest News :

கல்வியின் மகத்துவத்தை பேசும் நல்ல படைப்பு ’சார்’ - திருமாவளவன் புகழாரம்!
Saturday October-19 2024

எஸ்.எஸ்.எஸ் பிக்சர்ஸ் (SSS Pictures) சார்பில் சிராஜ்.எஸ் தயாரிப்பில் இயக்குநர் போஸ் வெங்கட் இயக்கத்தில், நடிகர்  விமல் நடிப்பில்,  கல்வியின் அவசியத்தை உணர்த்தும் சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள  ’சார்’ திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி, பரவலான பாராட்டுக்களை குவித்து வருகிறது. 

 

இந்நிலையில் முக்கிய பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் இப்படம் பேசும் கருத்தியலை பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்  தொல்.திருமாவளவன். படம் பார்த்து, படக்குழுவினரை பாராட்டி, படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். 

 

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் படம் பற்றி கூறுகையில், “நண்பர் போஸ் வெங்கட் இயக்கத்தில் உருவாகியிருக்கும் சார் திரைப்படம் கல்வியால் தான் எளிய மக்கள் மேன்பட முடியும் என்பதை பேசுகின்ற ஒரு திரைப்படம், கல்வி தான் உண்மையான வெளிச்சம், கல்வியால் சமூகம் விடுதலை பெறும் என்பதை, அடிப்படையாக கொண்டு போஸ் வெங்கட் இப்படத்தை உருவாக்கியிருக்கிறார். ஒவ்வொருவரும் தங்கள் பாத்திரத்தில் ஒன்றிப்போய் அருமையாக நடித்துள்ளார்கள். படக்குழுவினர் அனைவரும் இணைந்து, கல்வியின் மகத்துவத்தை பேசும் மிகச்சிறந்த படமாக இப்படத்தை தந்துள்ளார்கள். அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

 

Thirumavalavan Praise Sir Movie

 

போஸ் வெங்கட் இயக்கியுள்ள  இப்படத்திற்கு ஒளிப்பதிவு இனியன், போர்த்தொழில் படப்புகழ்  ஶ்ரீஜித் சாரங் எடிட்டிங், இசையமைப்பு சித்து குமார், மற்றும் கலை இயக்கம் பாரதி ஆகியோர் பணியாற்றியுள்ளனர். 

 

இயக்குநர் வெற்றிமாறனின் திரைப்பட  நிறுவனமான கிராஸ்ரூட் நிறுவனம் இப்படத்தை பெருமையுடன் வழங்குகிறது.  ப்ளாக்பஸ்டர் வெற்றிப்படங்களை வெளியிட்டு வரும்  ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் கோட் படத்திற்குப் பிறகு சார் படத்தை தமிழகமெங்கும்  வெளியிட்டுள்ளது. அக்டோபர் 18 ஆம் தேதி உலகமெங்கும் இப்படம் திரையரங்குகளில் வெளியாகி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

Related News

10120

தாமதம் எங்களுக்கு புதுசு இல்ல - நடிகர் கார்த்தி
Tuesday January-13 2026

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே...

நடிகை கெளதமிக்கு புரட்சித்தலைவி டாக்டர் அம்மா விருது!
Tuesday January-13 2026

எம். ஜி. ஆர். சிவாஜி அகாடமி என்ற தலைப்பில் பிரபல மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபு, ஆண்டு தோறும் சிறந்த பட தயாரிப்பாளர், சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த கதாநாயகன், கதாநாயகி மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவித்து வருகிறார்...

Recent Gallery