இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள விஜயின் ‘மெர்சல்’ படத்தை ரசிகர்கள் பிரம்மாண்டமாக கொண்டாடி வருகிறார்கள்.
தமிழகத்தின் பல பகுதிகளில் சிறப்பு காட்சி அதிகாலையில் திரையிடப்பட்டுள்ளது. இதனால், ரசிகர்கள் விஜய் பேனருக்கு பால் அபிஷேகம் செய்வது, பெரிய அளவில் கட்-அவுட் வைப்பது என்று மெர்சல் படத்தை கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில், காஞ்சிபுரம் அடுத்த வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகே, ‘மெர்சல்’ படத்தின் பேனரை கட்ட குடிநீர் குழாய் சுவரின் மீது நான்கு பேர் ஏறிய போது சுவர் இடிந்து விழுந்ததில், கீழே நின்று கொண்டிருந்த 24 வயது வாலிபலி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து வாலாஜாபாத் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் வாட்ஸ்-அப்பில் வைரலாக பரவி வருகிறது.
லேர்ன் & டீச் புரொடக்ஷன்ஸ் ( Learn & Teach Production) சார்பில் எஸ்...
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...