தொலைக்காட்சித் தொடர் மூலம் நடிகராக அறிமுகமான போஸ் வெங்கட், தனது அழுத்தமான நடிப்பின் மூலம் மக்கள் மனதில் நல்ல நடிகராக இடம் பிடித்தவர், வெள்ளித்திரையில் அறிமுகமாகிய குறுகிய காலக்கட்டத்திலேயே சிறந்த குணச்சித்திர நடிகராக உயர்ந்தார். எந்த வேடமாக இருந்தாலும் அதில் தன்னை கச்சிதமாக பொருத்திக் கொண்டு தனது நடிப்பின் மூலம் அந்த கதாபாத்திரத்திற்கு சிறப்பான பங்களிப்பைக் கொடுத்து வந்தவர், அடுத்தக்கட்டமாக இயக்குநரானார்.
போஸ் வெங்கட் இயக்கிய முதல் படமான ‘கன்னிமாடம்’ ஜாதிய அடுக்குமுறை, கௌரவக் கொலை பற்றிப் பேசி அவரை அழுத்தமான படைப்பாளியாக அடையாளப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்த நிலையில், நடிகராக தனது பயணத்தை தொடர்ந்தவர், அப்படியே இயக்குநர் பணியையும் தொடர்ந்தார். அந்த வகையில், போஸ் வெங்கட்டின் இயக்கிய இரண்டாவது படமாக சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான ‘சார்’ திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
எஸ்.எஸ்.எஸ் பிக்சர்ஸ் சார்பில் சிராஜ்.எஸ் தயாரித்திருக்கும் இப்படத்தில் விமல் நாயகனாக நடித்திருக்கிறார். கல்வியை மையப்படுத்தி, ஆசிரியர்களின் தியாகம் மற்றும் நம் சமூகத்தில் கல்வி தந்த மாற்றத்தை ‘சார்’ திரைப்படம் மூலம் அழுத்தமாக பதிவு செய்ததோடு, அதை அருமையான கமர்ஷியல் திரைப்படமாக தந்து, ரசிகர்களிடம் தனக்கென தனி இடத்தைப் பெற்றிருக்கிறார் போஸ் வெங்கட். ரசிகர்கள், விமர்சகர்கள், திரைக் கலைஞர்கள் என பலபுறங்களிலிருந்தும் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. அடுத்த கட்டமாக மிக விரைவில் பெரிய முன்னணி நட்சத்திரத்தோடு இணையவுள்ளார். தன் இரண்டாவது படத்தின் மூலம் ஏ லிஸ்ட் இயக்குநர்கள் எனும் இடத்திற்கு நகர்ந்துள்ளார் போஸ் வெங்கட்.
சார் படம் ரசிகர்கள், விமர்சகர்கள் என அனைவர் பாராட்டைப்பெற்று, திரையரங்குகளில் பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது. இப்படத்திற்கான வரவேற்பால் திரையரங்கு எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
போஸ் வெங்கட் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவு இனியன், படத்தொகுப்பு சிவா, இசையமைப்பு சித்து குமார், மற்றும் கலை இயக்கம் பாரதி ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.
இயக்குநர் வெற்றிமாறனின் திரைப்பட நிறுவனமான கிராஸ்ரூட் நிறுவனம் இப்படத்தை பெருமையுடன் வழங்கியுள்ளது. ப்ளாக்பஸ்டர் வெற்றிப்படங்களை வெளியிட்டு வரும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் கோட் படத்திற்குப் பிறகு சார் படத்தை தமிழகமெங்கும் வெளியிட்டுள்ளது.
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...
Strengthening its commitment to advanced cancer diagnosis and treatment, Iswarya Hospital today inaugurated the Iswarya Cancer Centre at its OMR Taramani facility in Chennai...