டிரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு ஆகியோரது தயாரிப்பில், அறிமுக இயக்குநர் அருண்பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘அருவி’. இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரே அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த நிலையில், தற்போது இப்படத்தை பார்த்த பிரபலங்கள் பாராட்டு மழையில் ‘அருவி’ நனைந்து வருகிறது.
சமீபத்தில் இப்படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இதில், எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள், ஊடகத்துறையினர், அரசியல் பிரமுகர்கள், இயக்குநர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என பல துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் பங்கேற்றனர். படத்தை பார்த்த அனைவரும் படத்தையும், இயக்குநரையும் வெகுவாக பாராட்டினார்கள்.
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தை நடிகர் சிவகார்த்திகேயன், ‘அருவி’ குறித்தும் அதில் நடித்த ஹீரோயின் அதிதி பாலன் குறித்தும் தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியது மிகப்பெரிய அளவில் டிரெண்டாகியது.
ரிலிஸுக்கு முன்பாகவே இப்படி பலரது பாராட்டு மழையில் நனைந்து வரும் ‘அருவி’, ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
லேர்ன் & டீச் புரொடக்ஷன்ஸ் ( Learn & Teach Production) சார்பில் எஸ்...
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...