Latest News :

தென் சென்னையை மையமாக கொண்டு உருவாகும் ஆக்‌ஷன் திரில்லர் படம்!
Tuesday October-29 2024

தென் சென்னையை மையமாக கொண்ட விறுவிறுப்பான கதையம்சத்தில் புது முகங்கள் ரங்கா, ரியா நடிப்பில் உருவாகிவரும் புதிய ஆக்ஷ்ன்-திரில்லர் திரைப்படம் ’தென் சென்னை'.

 

சென்னையை மையமாக கொண்டு பல திரைப்படங்கள் வந்துள்ளன, இவற்றில் இருந்து மாறுபட்டு தென் சென்னை பகுதியினை வேறு கோணத்தில் காட்டும்,  புதுமையான ஆக்சன் திரில்லராக அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் இப்படத்தை உருவாக்கி வருகிறார் அறிமுக இயக்குநர் ரங்கா.

 

இதில் முன்னாள் ரானுவ அதிகாரியாக இருந்து நடிகரான நிதின் மெஹ்தாவும், ‘பொன்னியின் செல்வன்’ நாடக புகழ் இளங்கோ குமனனும் பிறதான பாத்திரங்கள் ஏற்றுள்ளனர். மேலும் வத்சன் நடராஜன், சுமா, ஆறு பாலா, திலீபன், தாரனி மற்றும் பலர் இதில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அறிமுக இயக்குநர் ரங்கா இப்படத்தை தயாரித்து இயக்குவதுடன், கதையின் நாயகன், பாடல் ஆசிரியர் என பல முயர்ச்சிகளில் இறங்கியுள்ளார். ’டாடா’ திரைப்படத்தில் அறிமுகமாகி புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஜென் மார்டின், இந்த படதிற்க்கு பின்னனி இசை அமைத்துள்ளார்.

 

சென்னையிலும், பெங்களூரூவிலும் படமாக்கப்பட்டுள்ள இத்திரைப்படதிற்க்கு ஒளிப்பதிவாளராக சரத்குமார், படத்தொகுப்பாளராக இளங்கோவன் கைகோர்த்துள்ளனர்.  இப்படதின் போஸ்டர் லுக்ஸ், பாடல் மற்றும் டீசர் ட்ரைலர் சமீபதில் இணையத்தில் வெளியிடப்பட்ட நிலையில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

 

சிவ பத்மயன் பாடல் இசையில், நரேஷ் ஐயர் குரலில் “புது வானம் புது பூமி” இனிமையான மெலடி பாடலாகவும் , குழுவினரின் வித்யாசமான முயற்ச்சியில் மிரட்டலான டீசரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இதில் தண்ணீருக்கு அடியில் சிலர் உடற்பயிற்ச்சி செய்வது போன்ற காட்சிகள் வருகின்றன. இது கடற்படை கமாண்டோக்களின் பயிற்சி உத்திகளாகும், நீருக்கடியில் பயிற்ச்சி எடுப்பது போன்று காட்சிகள் தத்ரூபமாக படமாக்கிஉள்ளனர், இது ரசிகர்களை கவறும் வகையில் இருக்கும் என படகுழுவினர் நம்பிக்கை தெறிவிக்கின்றனர்.

 

இப்படத்தின் பெரும்பாலான பணிகள் நிரைவடைந்த நிலையில் படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

10141

’குறள்’ ஆக மாறிய நடிகை மமிதா பைஜூ!
Wednesday June-25 2025

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடிப்பில் கீர்தீஸ்வரன் இயக்கத்தில் பான் இந்தியன் படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘டூட்’(Dude)...

இயக்குநர் நெல்சன் நம்பிக்கையை காப்பாற்றி இருக்கிறார் - ‘டி.என்.ஏ’பட விழாவில் நடிகர் அத்ரவா பேச்சு
Wednesday June-25 2025

ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், தயாரிப்பாளர் எஸ்...

’சாருகேசி’ படம் வாழ்க்கையைப் பற்றி யோசிக்க வைத்தது - நடிகை சுஹாசினி நெகிழ்ச்சி
Tuesday June-24 2025

நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மேடை நாடகமான ‘சாருகேசி’ இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா திரைக்கதை இயக்கத்தில் திரைப்படமாக உருவாகியுள்ளது...

Recent Gallery