சிவகார்த்திகேயனின் 21 வது திரைப்படமாக உருவாகியுள்ள ‘அமரன்’ நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கும் இப்படம் மேஜர் முகுந்த் வரதாராஜனின் வாழ்க்கையை தழுவியதாகும்.
பாடல்கள் மற்றும் டிரைலர் மூலம் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், டிக்கெட் முன்பதிவு கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. முன்பதிவு ஆரம்பமான சில மணி நேரங்களில் டிக்கெட் விற்பனை வேகமெடுத்ததோடு பல திரையரங்கங்களில் அனைத்து டிக்கெட்களும் விற்று தீர்ந்து விட்டது.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையில் நான்கு திரைப்படங்கள் வெளியனாலும் அதில் ‘அமரன்’ படம் வெளியீட்டுக்கு முன்பாகவே முதல் இடத்தை பிடித்துவிட்டதாக, அதன் அசத்தலான முன்பதிவு மூலம் சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. மற்ற படங்களை விட அமரன் திரைப்படத்தின் டிக்கெட்கள் அதிகமாக விற்பனையாகி வருவதால் படம் வெளியீட்டுக்குப் பிறகு திரையரங்கங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க கூடும் என்று சொல்லப்படுகிறது.
சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படங்களிலேயே அதிக பொருட்ச் செலவில் உருவாகியிருக்கும் படமாக மட்டும் இன்றி ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படமாகவும் ‘அமரன்’ பார்க்கப்படுகிறது. அதனால், அமரன் சிவகார்த்திகேயன் சினிமா பயணத்தில் மிக முக்கியமான படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டீச்சர்ஸ் ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் சார்பில் டாக்டர்...
இயக்குநர் ஜெ.கே.சந்துரு இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘ரிவால்வர் ரீட்டா’...
இசை மற்றும் கலைகளை வளர்த்து ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு டாக்டர் ஜெ...