Latest News :

பரபரப்பான சம்பவங்கள் பின்னணியில் உருவான ‘முரா’ பட டிரைலர் வெளியானது!
Thursday October-31 2024

‘கப்பேலா’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் முஹம்மது முஸ்தபா, இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஆக்‌ஷன் திரில்லர் படம் ‘முரா’. ஹிருது ஹாரூன், சுராஜ் வெஞ்சரமூடு, கனி குஸ்ருதி மற்றும் மாலா பார்வதி ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் இப்படம் திருவனந்தபுரத்தில் நடந்த உண்மைச் சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ளது.

 

ரகசியமாக பாதுகாக்கப்படும் கருப்பு பணத்தை கொள்ளையடிக்க திட்டமிடும் இளைஞர் குழு, கேங்ஸ்டர், போலீஸ் என பரபரப்பான சம்பவங்களின் பின்னணியில் உருவாகியிருக்கும் இப்படத்தின் டிரைலர் வெளியாகி மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் கதைக்கரு மற்றும் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தும் வகையில் இருக்கும் இந்த டிரைலரே படம் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது.

 

கேன்ஸ் விருது வென்ற ‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்’, ‘க்ராஷ் கோர்ஸ்’ இணையத் தொடர், ‘மும்பைக்கார்’ என்ற இந்தி திரைப்படம் ‘தக்ஸ்’ என எதிர்பார்ப்பு மிக்க திரைப்படங்களில் நடித்து ரசிகள் மட்டும் இன்றி திரைத்துறையின் கவனத்தையும் ஈர்த்துள்ள ஹிருது ஹாரூன், ‘முரா’ படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

‘ஜன கண மன’ மற்றும் ‘டிரைவிங் லைசென்ஸ்’ படப்புகழ் நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு மிக முக்கியமான திருப்புமுனை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். 

 

கிறிஸ்டி ஜாபி இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஃபாசில் நாசர் ஒளிப்பதிவு செய்துள்ளார். சமன் சாக்கோ படத்தொகுப்பு செய்ய, ஸ்ரீனு கல்லேலில் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

 

மிகப்பெரிய பொருட்ச் செலவில் ரியா ஷிபு தயாரித்துள்ள ‘முரா’ திரைப்படம் வரும் நவம்பர் 8 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

 

Related News

10145

சென்னை சர்வதேச திரைப்பட விழாவுக்கு ரூ.95 லட்சம் நிதி வழங்கிய தமிழக அரசு!
Friday December-12 2025

தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...

தி.மு.க வில் இணைந்தார் ‘புலி’ பட தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார்!
Thursday December-11 2025

திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனர் பி...

தாடி பாலாஜிக்கு மருத்துவ உதவி! - ரூ.1 லட்சம் வழங்கிய பிடி செல்வகுமார்!
Thursday December-11 2025

சமீபத்திய மழையில் நனைந்த நடை பாதை வியபாரிகளுக்கும், ஏழை எளியவர்களுக்கும், பல உதவிகள் செய்த, கலப்பை மக்கள் இயக்க தலைவர் டாக்டர் பி...

Recent Gallery