அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் விஜய், விரைவில் அரசியல் பணிகளுக்கு ஓய்வு கொடுத்து விட்டு தனது படத்தின் பணிகளில் தீவிரம் காட்ட உள்ளார். விஜயின் 69 வது படத்தின் படப்பிடிப்பு கடந்த செப்டம்பர் மாதம் பாடல் காட்சியுடன் தொடங்கியது. ஒரு பாடல் படமாக்கப்பட்ட நிலையில் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. விரைவில் விஜய் 69 படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கும் நிலையில், அப்படம் பற்றிய அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
மிகப்பெரிய பட்ஜெட்களில் உருவாகும் விஜய் படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் படத்தின் இயக்குநர்கள் மட்டும் இன்றி படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கு சம்பளமாக அவர்கள் கேட்கும் தொகையை கொடுத்து விடுவார்கள். ஆனால், விஜய் 69 படத்தில் முன்னணி நடிகர் ஒருவர் தான் தற்போது வாங்கும் சம்பள தொகையை கேட்க, அவருக்கு தயாரிப்பு தரப்பு நோ, சொன்னதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
தலைவா, மெர்சல் போன்ற படங்களில் நடித்திருக்கும் சத்யராஜை விஜய் 69 படத்திலும் நடிக்க அனுகியிருக்கிறார்கள். அவரது கதாபாத்திரம் சிறப்பானதாக இருந்ததால் அவரும் நடிக்க ஒப்புக்கொண்டாராம். ஆனால், அவர் சம்பளம் கேட்ட போது, எங்களிடம் அவ்வளவு பட்ஜெட் இல்லை, என்று சொல்லிவிட்டார்களாம். அதனால், சத்யராஜ் அந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம்.
விஜய் தனது கட்சியின் முதல் மாநாட்டை வெற்றிகரமாக முடித்திருக்கும் நிலையில், அவர் நடிக்கும் கடைசிப் படம் என்று சொல்லப்படும் ‘விஜய் 69’-க்கு இப்படி ஒரு நிலையா?, என்று கோலிவுட்டே அதிர்ச்சியடைந்துள்ளது.
சிறந்த நடிகராக அறியப்பட்ட போஸ் வெங்கட் 'கன்னி மாடம்' என்ற படத்தை இயக்கியதன் மூலம் சிறந்த இயக்குனராகவும் அறியப்பட்டார்...
தமிழ் சினிமா நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் என ஒட்டு மொத்த கலைஞர்களையும் கொண்டாடுவதில் முதல் இடத்தில் இருப்பவர்கள் மலேசியா மற்றும் சிங்கப்பூர் தமிழர்கள் தான்...
’சித்தா’ படத்தை தொடர்ந்து இயக்குநர் எஸ்...