பான் இந்தியா அளவில் பிளாக்பஸ்டர் திரைப்படமான ’ஹனுமா’னின் வெற்றியைத் தொடர்ந்து அதன் சீக்வலான ‘ஜெய் ஹனுமான்’ திரைப்படத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸுடன் இணைந்து இயக்குநர் பிரசாந்த் வர்மா அறிவித்துள்ளார். தேசிய விருது வென்ற நடிகர் ரிஷப் ஷெட்டி இந்தப் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
பல திறமையாளர்கள் இந்தப் படத்தில் ஒன்றிணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகமாக்கியுள்ளது. சமகால கதைகளை புராணங்களுடன் கலந்து சொல்லும் புதுமையான அணுகுமுறைக்காக பிரசாந்த் வர்மா கொண்டாடப்படுகிறார். ’காந்தாரா’ படத்தின் வெற்றி மூலம் நடிகர் ரிஷப் ஷெட்டி நாடு முழுவதும் ரசிகர்களைக் கொண்டுள்ளார். இப்போது ‘ஜெய் ஹனுமான்’ படத்தில் அவர் நடிக்க இருப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது.
ஹனுமானாக ரிஷப்ஷெட்டி நடிக்கிறார் என்பதுடன் படத்துடன் முதல் பார்வை போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. சக்தி வாய்ந்த தோரணையில் இந்த போஸ்டரில் காணப்படும் ரிஷப்ஷெட்டி தனது கையில் ஸ்ரீ ராமரின் சிலையை பயபக்தியுடன் பிடித்திருக்கிறார்.
இந்த போஸ்டர் ரிஷப்ஷெட்டியின் கட்டுமாஸ்தான உடலை மட்டும் காட்டாமல் ஹனுமானுடன் தொடர்புடைய ஆழ்ந்த பக்தியையும் வலிமையையும் பிரதிபலிக்கிறது. ஹனுமனை அவர் திரையில் எவ்வாறு உயிர்ப்பிக்கிறார் என்பதைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். பிரசாந்த் வர்மா திரையில் கதையை பிரமாண்டமாக கொடுக்க இருக்கிறார் என்பதை முதல் பார்வை போஸ்டர் விளக்குகிறது.
’ஜெய் ஹனுமான்’ என்பது உடைக்க முடியாத சக்தி மற்றும் விசுவாசத்திற்கு பெயர் பெற்றவர். அதிரடி ஆக்ஷன் மற்றும் புராண காவியமாக இந்தப் படம் உருவாகிறது. கலியுகத்தில் ஹனுமான் அக்னியாதவாஸில் வசிக்கிறார். தனது ராமருக்கு கொடுக்கப்பட்ட புனிதமான வாக்குறுதியால் அவர் நாடு கடத்தப்பட்டார்.
அனுமனின் மௌனம் சரணடைதல் அல்ல, மறைந்திருக்கும் சக்தி சரியான சமயத்தில் வெளிவரக் காத்திருக்கிறது. ’ஜெய் ஹனுமான்’ என்பது உடைக்க முடியாத பக்தி மற்றும் அனைத்து முரண்பாடுகளையும் மீறும் ஒரு சபதத்தின் வலிமைக்கான அஞ்சலி. ’ஜெய் ஹனுமான்’ திரைப்படம் பிரசாந்த் வர்மா சினிமாடிக் யுனிவர்ஸின் (PVCU) ஒரு பகுதியாகும். நவீன் யெர்னேனி மற்றும் ஒய் ரவிசங்கர் ஆகியோர் அதிக பட்ஜெட் மற்றும் உயர்தர தொழில்நுட்ப தரத்துடன் படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர்.
சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் 98 ஆவது படத்தை இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்க, தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான வடிவேலு - பகத் பாசில் இணைந்து நடித்திருக்கும் 'மாரீசன்' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டிருக்கிறது...
எம் என் ஆர் பிக்சர்ஸ் சார்பில், எம் நாகரத்தினம் தயாரித்து நடிக்க, இயக்குநர் எஸ் மோகன் எழுதி இயக்க, கிராமத்துக் கதைக்களத்தில் அருமையான கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள படம், வள்ளிமலை வேலன்...
ஸ்ரீ கிருஷ்ணா புரொடக்ஷன்ஸ் இன் "உசுரே" திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் ஆடியோ லான்ச் இன்று பிரசாத் லேப் திரை அரங்கில் வெகு விமர்சையாக நடைபெற்றது...