’மெர்சல்’ படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவித்து பெங்களூர் மற்றும் மைசூரில் கன்னட அமைப்புகள் நடத்திய போராட்டத்தின் போது, விஜய் ரசிகர்களுக்கும், கன்னட அமைப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மல்லேஸ்வரம் ராதாகிருஷ்ணா தியேட்டரில் ‘மெர்சல்’ திரைப்படம் திரையிடப்பட்டது. விஜய் ரசிகர்கள் பெரிய அளவில் கட்-அவுட் வைத்து படத்தின் ரிலிஸை கொண்டாடினார்கள்.
கர்நாடகாவில் தமிழ் திரைப்படம் வெளியிடக் கூடாது என முழக்கமிட்டபடி வந்த கன்னட அமைப்பினர் விஜய் ரசிகர்கள் வைத்திருந்த கட் அவுட்டுகளை அகற்றினர். இதையடுத்து விஜய் ரசிகர்களுக்கும் கன்னட அமைப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் மெர்சல் படம் திரையிடப்படவில்லை.
இதேபோல் மைசூருவில் தியேட்டர் ஒன்றிலும் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அங்கும் மெர்சல் திரையிடப்படவில்லை.
மேலும், விஜய் ரசிகர்கள் கன்னட அமைப்பினரால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவங்களால் மைசூர் மற்றும் பெங்களூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
லேர்ன் & டீச் புரொடக்ஷன்ஸ் ( Learn & Teach Production) சார்பில் எஸ்...
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...