ZEE5 தளத்தில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஐந்தாம் வேதம் சீரிஸ், பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றியடைந்துள்ளது. வெளியான குறுகிய காலத்தில் ZEE5 இல் டிஜிட்டல் பிரீமியர் மூலம், 50 மில்லியன் பார்வையாளர் நிமிடங்களைக் கடந்து, புதிய சாதனையைப் படைத்துள்ளது. கல்ட் கிளாசிக் மர்மதேசம் புகழ் இயக்குநர் நாகா இயக்கத்தில், அபிராமி மீடியா ஒர்க்ஸ் தயாரித்துள்ள இந்த சீரிஸில், சாய் தன்ஷிகா முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ளார். சந்தோஷ் பிரதாப், விவேக் ராஜகோபால், ஒய் ஜீ மகேந்திரா, கிரிஷா குருப், ராம்ஜி, தேவதர்ஷினி, மேத்யூ வர்கீஸ், மற்றும் பொன்வண்ணன் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
ஒரு பெண் தன் தாயின் இறுதிச் சடங்குகளுக்காக வாரணாசிக்குச் செல்லும் ஒரு பெண்ணின் பயணத்தில் இந்தக்கதை துவங்குகிறது, மர்மங்கள் சூழ்ந்த பழங்கால அடையாள சின்னமான ஐந்தாம் வேதத்தின் மாய சுழலுக்குள் அவள் சிக்குகிறாள். அவளைத் துரத்தும் பல மாயங்களிலிருந்து, அவள் தப்புக்கிறாளா ? ஐந்தாம் வேதத்தின் உண்மையான மர்மம் என்ன?, இக்கேள்விகளுக்கான பதில்களை தெரிந்துகொள்ள ZEE5 இல் பிரத்தியேகமாக ஸ்ட்ரீமிங் செய்யப்படும், ஐந்தாம் வேதம் சீரிஸை காணுங்கள்.
ஐந்தாம் வேதம் ஒரு மாய உலகிற்குள் நம்மை அழைத்துச் செல்கிறது. அனு தனது தாயின் இறுதிச் சடங்குகளைச் செய்வதற்காக, வாரணாசிக்குச் செல்லும் ஒரு பயணத்தில் இந்தக்கதை தொடங்குகிறது. வழியில், ஒரு மர்மமான நபரை அவள் சந்திக்கிறாள், அவர் ஒரு பழங்கால நினைவுச்சின்னத்தை அவளிடம் ஒப்படைக்கிறார், அதைத் தமிழ்நாட்டில் உள்ள ஒரு சாமியாரிடம் ஒப்படைக்கும்படி கூறுகிறார் - ஐந்தாம் வேதத்தின் ரகசியம் அடங்கிய அந்தப் பொருள் பல பல ரகசியங்களை உடைக்கிறது. தயங்கியபடி அந்தப் பணியை ஏற்றுக்கொள்ளும் அனு, பல சிக்கல்களுக்கு உள்ளாகிறாள். மேலும் பலரும் அந்தப் பொருளை அடையப் போராடுவது அவளுக்குத் தெரிய வருகிறது. பல ஆபத்துகளும் அவளைச் சூழ்கிறது. இந்தத் தடைகளைத் தாண்டி அவள் தன் பயணத்தில் வெற்றி அடைந்தாளா? என்பது தான் ஐந்தாம் வேதத்தின் கதைக்களம்.
பிரபல நிறுவனமான Behindwoods Productions தயாரிக்கும் ‘மூன்வாக்’ (Moonwalk) திரைப்படத்தின் 14 கேரக்டர் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது...
யாஷ் நடிக்கும் மிகப்பிரம்மாண்ட படைப்பான ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, மார்ச் 19, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படக்குழு அதன் இருண்ட மர்மமான உலகத்தின் இன்னொரு முக்கிய அத்தியாயத்தை ரசிகர்களுக்கு வெளிப்படுத்தியுள்ளது...
இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவரும், அவரது உறவினருமான மதிமாறன் புகழேந்தி ’செல்ஃபி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார்...