Latest News :

அம்மன் வேடத்தில் நடிகை ஓவியா! - சர்ச்சை வெடிக்குமா?
Wednesday November-06 2024

‘களவாணி’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமான ஓவியா தொடர்ந்து பல படங்களில் நாயகியாக நடித்தாலும், திடீரென்று வாய்ப்பு குறைந்ததால் பிக் பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று மீண்டும் மக்களிடம் பிரபலமடைந்தவர், அந்த நிகழ்ச்சியில் ஏற்பட்ட காதல் தோல்வியால் அடிக்கடி செய்திகளில் அடிபட்டு வந்தார். இருப்பினும் அவர் எதிர்பார்த்தது போல் அவருக்கு பட வாய்ப்புகள் அமையாத நிலையில், சமீபத்தில் அவர் இடம்பெற்றிருந்த ஆபாசமான வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

வீடியோ வைரலான உடன் அது பற்றி விளக்கம் அளித்த ஓவியா, அந்த வீடியோவில் இருந்தது நான் தான் என்றும், தன்னுடன் இருந்த ஆண் தனது காதலர் என்பதோடு, எங்களது தனிப்பட்ட வீடியோவை யாரோ இப்படி வெளியிட்டுவிட்டனர், என்றும் தெரிவித்தார். ஆனால், அந்த வீடியோவை பார்த்தவர்கள், அதை ஓவியாவே திட்டமிட்டு வீடியோவாக எடுத்திருப்பது போல் இருப்பதாக, கருத்து தெரிவித்து வந்தார்கள்.

 

இந்த நிலையில், ஓவியா நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு மற்றும் அவரது கதாபாத்திரம் சமீபத்தில் அறிமுகமாகியுள்ளது. ‘சேவியர்’ என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தில் ஓவியா ‘வர்ணா’ என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. அதே சமயம், படக்குழு வெளியிட்டுள்ள புகைப்படத்தில் ஓவியா, அம்மன் வேடத்தில் இருக்கிறார். ஆபாச வீடியோவில் இருந்த ஓவியா, இப்படி அம்மன் வேடம் போட்டிருப்பது படம் வெளியாகும் போது பெரும் சர்ச்சையாக வெடிக்கலாம், என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

மேலும்,  இப்படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ‘டாக்டர்.ஜேம்ஸ் மல்ஹோத்ரா’ என்ற கதாபாத்திரத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவர் நாயகனாக நடிக்கும் இரண்டாவது தமிழ்ப் படம் ‘சேவியர்’ என்பது குறிப்பிடத்தக்கது.

 

’அக்னி தேவி’ மற்றும் ‘ஃப்ரெண்ட்ஷிப்’ ஆகிய படங்களை தயாரித்து வெளியிட்ட ஷாண்டோவா ஸ்டுடியோ சார்பில் ஜான் பால்ராஜ் தயாரித்து இயக்கும் இப்படத்தில் ஜி.பி.முத்து ‘முத்து மாமா’ என்ற கதாபாத்திரத்திலும், விடிவி கணேஷ் ‘கடப்பார கணேசன்’ என்ற கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்கள்.

 

ஒரு மருத்துவமனையில் நிகழும் திரில்லர் மற்றும் நகைச்சுவை கலாட்டாவுடன், திருப்பங்கள் நிறைந்த திரைக்கதையுடன் இப்படம் உருவாக உள்ளது. கதாபாத்திரங்கள் அறிமுகத்தின் மூலம் நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது என்பது உறுதியாகிறது. 

 

டி.எம்.உதயகுமார் இசையமைக்கும் இப்படத்திற்கு மாணிக் ஒளிப்பதிவு செய்கிறார். கோஜோ படத்தொகுப்பு செய்ய, விமல் ராம்போ சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார். எஸ்.வி.பிரேம் ஆனந்த் கலை இயக்குநராக பணியாற்ற, ஸ்ரீ செல்வி நடன இயக்குநராக பணியாற்றுகிறார்.

 

விக்ன ஜான் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், ராபின், அஜ்மீர் ஷாகுல், விவேக் வின்சென்ட் ஆகியோர் நிர்வாகத் தயாரிப்பாளர்களாகவும், செந்தில் குமார், எம்.எஸ். ஸ்டாலின் மற்றும் ஜி.கே.பிரசன்னா இணைத் தயாரிப்பாளர்களாராக பணிபுரிகின்றனர்.

Related News

10152

தாமதம் எங்களுக்கு புதுசு இல்ல - நடிகர் கார்த்தி
Tuesday January-13 2026

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே...

நடிகை கெளதமிக்கு புரட்சித்தலைவி டாக்டர் அம்மா விருது!
Tuesday January-13 2026

எம். ஜி. ஆர். சிவாஜி அகாடமி என்ற தலைப்பில் பிரபல மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபு, ஆண்டு தோறும் சிறந்த பட தயாரிப்பாளர், சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த கதாநாயகன், கதாநாயகி மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவித்து வருகிறார்...

Recent Gallery