நடிகர் நிவின் பாலி மீது ஒரு பெண் பொய்யான குற்றச்சாட்டை சுமத்தியிருந்தார். ஆனால், இதை மறுத்த நடிகர் நிவின் பாலி, தன் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு பொய் என்பதை சட்ட ரீதியாக நிரூபிப்பேன். அதற்காக நான் எந்தவித எல்லைக்கும் செல்வேன், என்று தெரிவித்தார். அதன்படி இந்த குற்றச்சாட்டு குறித்து நிவின் பாலி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, நிவின் பாலி குற்றம் சாட்டப்பட்ட பெண் சம்பவம் நடந்ததாக குறிப்பிட்ட இடத்தில், அவர் குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்தில் அங்கு இல்லை, என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபித்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பளித்துள்ள நீதிபதிகள், நிவின் பாலி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய்யானது என்றும், அவர் நிரபராதி என்றும் அறிவித்துள்ளனர்.
நடிகர் நிவின் பாலி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் மீதான விசாரணையில், சம்பவம் நடந்த தேதி மற்றும் நேரத்தில் அவர் குறிப்பிட்ட இடத்தில் இல்லை என்பது உறுதியாகத் தெரியவந்தது. இதனையடுத்து, இந்த வழக்கில் ஆறாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட நிவின் பாலி அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் முறையாக விடுவிக்கப்பட்டுள்ளார். கொத்தமங்கலம் டி.ஒய்.எஸ்.பி முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் இந்த தீர்மானம் மிக நுணுக்கமாக விவரிக்கப்பட்டுள்ளது.
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே...
நேதாஜி புரொடக்ஷன்ஸ் சோலா சக்ரவர்த்தி, ஜி...
எம். ஜி. ஆர். சிவாஜி அகாடமி என்ற தலைப்பில் பிரபல மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபு, ஆண்டு தோறும் சிறந்த பட தயாரிப்பாளர், சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த கதாநாயகன், கதாநாயகி மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவித்து வருகிறார்...