தஞ்சையைச் சேர்ந்த வழக்கறிஞரும், தொழிலதிபருமான துரை சுதாகர், தனது சமூகப் பணிகள் மூலம் மக்களால் பப்ளிக் ஸ்டார் என்று அழைப்பதற்கு ஏற்ப, தமிழ் திரையுலகில் நட்சத்திரமாக பயணிப்பதோடு, தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தராகவும் வலம் வருகிறார்.
இரா.சரவணன் இயக்கத்தில், சசிகுமார் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘நந்தன்’ திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்த நடிகர் துரை சுதாகர், தொடர்ந்து பல படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்.
தொழில் , பொதுப்பணி, சினிமா என்று பிஸியாக இருக்கும் துரை சுதாகரின் தனிச்சிறப்பாக விருந்தினர்களை அவர் உபசரிக்கும் முறை குறித்து பலர் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். அவர் நடிக்கும் படங்கள் மட்டும் இன்றி, தஞ்சையில் எந்த ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றாலும் சரி, திரை பிரபலங்கள் தஞ்சைக்கு வருகை தந்தாலும் சரி, அவர்களுக்கு உற்சாக வரவேற்பளித்து, அவர்களுக்கு விருந்து வைத்து உபசரித்து அசத்தும் முதல் நபராக இருக்கிறார்.
இந்த நிலையில், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் ச.முரசொலி அவர்களின் அலுவலக திறப்பு விழாவுக்காக தஞ்சை வந்திருந்தார். உதயநிதி தமிழக துணை முதல்வர் என்றாலும், திரைத்துறையில் தயாரிப்பாளராகவும், நடிகராகவும் வலம் வந்தவர் என்பதால், அவருக்கு நடிகர் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் உற்சாக வரவேற்பளித்து அசத்தியிருக்கிறார்.
பிரபலங்களை வரவேற்பதற்காக பேனர்கள் வைப்பது மற்றும் பத்திரிகைகளில் விளம்பரங்கள் கொடுப்பது வழக்கமாக அனைவரும் செய்வது தான் என்றாலும், அதையும் தாண்டி இணையதளம், சமூக வலைதளம் ஆகியவற்றில் உதயநிதி ஸ்டாலின் அவர்களை வரவேற்கும் விளம்பரங்களை வெளியிட்டு துணை முதல்வரின் தஞ்சை வருகையை திருவிழாவாக மாற்றியிருக்கிறார் துரை சுதாகர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு உலக பணக்காரர் எலான் மஸ்க் தனது எக்ஸ் தள பதிவில் ‘தப்பாட்டம்’ படத்தின் புகைப்படத்தை வெளியிட்டதன் மூலம் அப்படத்தின் நாயகனான பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், உலகம் முழுவதும் டிரெண்டான நிலையில், அவர் துணை முதல்வரை வரவேற்ற முறை தஞ்சை மக்களை திரும்பி பார்க்க வைத்ததோடு, சமூக வலைதளங்களில் மீண்டும் அவரை டிரெண்டாக்கியுள்ளது.
சிறந்த நடிகராக அறியப்பட்ட போஸ் வெங்கட் 'கன்னி மாடம்' என்ற படத்தை இயக்கியதன் மூலம் சிறந்த இயக்குனராகவும் அறியப்பட்டார்...
தமிழ் சினிமா நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் என ஒட்டு மொத்த கலைஞர்களையும் கொண்டாடுவதில் முதல் இடத்தில் இருப்பவர்கள் மலேசியா மற்றும் சிங்கப்பூர் தமிழர்கள் தான்...
’சித்தா’ படத்தை தொடர்ந்து இயக்குநர் எஸ்...