இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில், சூர்யா நடிப்பில், ஸ்டுடியோ கிரீன் கே.இ.ஞானவேல்ராஜாவின் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘கங்குவா’ திரைப்படம் இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
வரும் நவம்பர் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் பல மொழிகளில் 11,500 திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘கங்குவா’ படத்தின் விளம்பர பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், படத்தின் டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கியுள்ளது.
சென்னை பாடியில் உள்ள கிரீன் சினிமாஸ் திரையரங்கில் நேற்று (நவம்பர் 08) ’கங்குவா’ படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. முதல் நாளான நேற்று முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களில் அனைத்து டிக்கெட்களும் விற்பனையாகிவிட, இரண்டாவது நாளான இன்றும் முன்பதிவில் டிக்கெட்கள் வேகமாக விற்பனையாகி வருகிறது.

கிரீன் சினிமாஸ் திரையரங்கத்தை தொடர்ந்து மற்ற திரையரங்குகளிலும் ‘கங்குவா’-வின் டிக்கெட் முன்பதிவு விரைவில் தொடங்க இருக்கிறது.
விக்ரம் பிரபு நடிப்பில் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள படம் ‘சிறை’...
பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் திரைப்படம் ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’...
வெரஸ் புரொடக்ஷன்ஸ் (Verus Productions) தயாரிப்பில் உருவாகி வரும் அறிவியல் கிரைம் த்ரில்லர் திரைப்படமான ‘ரூட் - ரன்னிங் அவுட் ஆஃப் டைம்’ (ROOT – Running Out of Time) படத்தின் முதல் பார்வை போஸ்டரை, நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் வெளியிட்டார்...