செய்திகள், நிகழ்வுகள் மற்றும் பொழுதுபோக்கிற்காக மக்கள் அதிகளவில் டிஜிட்டல் மீடியாக்களை நோக்கி பயணப்பட்டாலும், அவை நம் அருகில் அல்லாத செய்திகளாகவோ, நிகழ்களாகவோ மட்டுமே இருக்கிறது. ஆனால், நம் அருகே நடைபெறும் சம்பவங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொல்வது மற்றும் நம் அருகே இருப்பவர்களுடன் தொடர்பை ஏற்படுத்துவதற்காக எந்த தளமும் இல்லாத போது, அத்தகைய குறையை போக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ள தளம் தான் KYN (Know Your Neighbourhood).
உள்ளூர் நிகழ்வுகளின் நேரடி ஒளிபரப்பு, நுண்ணறிவுள்ள வலைப்பதிவுகள், தகவல் தரும் கிளிப்புகள் மற்றும் ஈர்க்கக்கூடிய வீடியோக்கள் உட்பட, வெளியீட்டாளர் மற்றும் பயனர் உருவாக்கிய உள்ளடக்கத்துடன் உள்ளடக்கத்தின் வரிசையைக் கொண்டு, பயனர்களுக்கு தரமான பொழுதுபோக்கையும், அக்கம்பக்கத்தில் உள்ள அனைத்தையும் பற்றிய தகவலையும் வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள KYN ‘டேக் ஒன்’ என்ற தலைப்பில் குறும்பட போட்டி ஒன்றை நடத்தியது. இதில் மொத்தம் 512 குறும்படங்கள் பங்கேற்க அதில், 240 குறும்படங்கள் தேர்வு செய்யப்பட்டு, அதில் இருந்து 45 குறும்படங்கள் நடுவர்கள் பார்வைக்கு அனுப்பப்பட்டது.
45 குறும்படங்களையும் பார்த்த நடுவர்கள் இறுதியாக 6 குறும்படங்களை தேர்வு செய்தனர். ஆறு குறும்படங்களில் இருந்து மூன்று குறும்படங்கள் தேர்வு செய்யப்பட்டு, முறையே முதல், இரண்டு மற்றும் மூன்றாம் பரிசு வழங்கப்பட்டது.
இந்த குறும்பட போட்டியின் பரிசு வழங்கும் விழா நேற்று (நவம்பர் 08) சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள லீ மேஜின் லெண்டர்ன் திரையரங்கில் நடைபெற்றது. இதில், இயக்குநர்களும் தயாரிப்பாளர்களுமான புஷ்கர் - காயத்ரி, கெளதம் வாசுதேவ் மேனன், சசிகாந்த், சமீர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்கள்.
விக்னேஷ்குமார்.பி இயக்கிய ‘எத்தனை காலம் தான்’ என்ற குறும்படம் முதல் இடத்தை பிடித்தது. வெற்றி பெற்ற இந்த குறும்படக் குழுவுக்கு சான்றிதழ், வெற்றி கேடயம் மற்றும் ரூ.1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
சலாதீன் சாது இயக்கிய ‘மா’ குறும்படம் இரண்டாம் இடத்தை பிடித்தது. இப்படக் குழுவினருக்கு சான்றிதழ், வெற்றி கேடயம் மற்றும் ரூல்75,000 பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
மூன்றாவது இடத்தை ராம் கெளதம் இயக்கிய ‘ஒரு மெலிசானா கோடு’ குறும்படம் பிடித்தது. இக்குழுவுக்கு சான்றிதழ், வெற்றி கேடயம் மற்றும் ரூ.50,000 பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
மேலும், சிறந்த நடிகர், சிறந்த இசை உள்ளிட்ட பல பிரிவுகளில் சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது.
சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்ட பிரபலங்கள் அனைவரும், மூன்று குறும்படங்களுக்கு மட்டுமே பரிசு வழங்கப்பட்டாலும், இறுதிப் போட்டியில் பங்கேற்ற 6 குறும்படங்களுடன், அதற்கு முந்தைய சுற்றில் பங்கேற்ற 45 குறும்படங்களும் சிறப்பானதாகவே இருந்தது, என்று கூறி போட்டியில் கலந்துக் கொண்டவர்களை பாராட்டினார்கள்.
KYN நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி காயத்ரி பேசுகையில், ”டேக் ஒன் குறும்பட போட்டியில் கலந்துக்கொண்ட உங்களுக்கு நன்றி. நாங்களும் இப்போது தான் தொடங்கியிருக்கிறோம். KYN தொடங்கி 9 மாதங்கள் தான் ஆகிறது. எந்த விசயமாக இருந்தாலும் அதை குறுகிய நேரத்தில் சொல்வதற்கான ஒரு தளமாக தான் KYN வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த குறும்பட போட்டியை நாங்கள் நடத்துவதற்கான நோக்கம் என்னவென்றால், தற்போதைய காலக்கட்டத்தில் இந்தியாவில் சோசியல் மீடியா பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதே சமயம், எதிர்கால தலைமுறைகள் இதனை எப்படி பயன்படுத்துவார்கள் என்று பார்த்தால், எந்த விசயமாக இருந்தாலும் அதை குறுகிய நேரத்தில் சொல்ல வேண்டும் என்று தான் நினைப்பார்கள். இன்று ஒரு விளம்பரமோ, அல்லது செய்தியையோ ஒரு நிமிடத்திற்குள் சொல்ல முயற்சிக்கிறார்கள். அப்போது தான் அதை மக்கள் பார்ப்பார்கள், இல்லை என்றால் அடுத்ததற்கு சென்று விடுவார்கள், இப்படி தான் எதிர்கால தலைமுறையினர் இருப்பார்கள். அதனால், சந்தோஷமான செய்தியோ அல்லது சோகமான செய்தியோ அதை குறுகிய நேரத்திற்குள் சொல்ல வேண்டும். 6 நொடிகளுக்குள் பார்வையாளர்களை கவரவில்லை என்றால், அவர்கள் அடுத்த வீடியோவுக்கு சென்று விடுவார்கள். அதனால் தான் குறுகிய நேரத்தில் உங்கள் திறமையை வெளிப்படுத்தும் விதமாக இந்த குறும்பட போட்டியை நடத்தினோம்.
இதில், மூன்று குறும்படங்களுக்கு பரிசு வழங்கப்பட்டாலும், தேர்வான 45 குறுமப்டங்களையும் இங்கிருக்கும் நடுவர்கள் பார்த்தார்கள். அதில் இருக்கும் இசை, நடிப்பு, மேக்கிங் என அனைத்தையுமே அவர்கள் ரசித்து ரசித்து மதிப்பெண் போட்டார்கள். இந்த நேரத்தில் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.
சிறந்த நடிகராக அறியப்பட்ட போஸ் வெங்கட் 'கன்னி மாடம்' என்ற படத்தை இயக்கியதன் மூலம் சிறந்த இயக்குனராகவும் அறியப்பட்டார்...
தமிழ் சினிமா நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் என ஒட்டு மொத்த கலைஞர்களையும் கொண்டாடுவதில் முதல் இடத்தில் இருப்பவர்கள் மலேசியா மற்றும் சிங்கப்பூர் தமிழர்கள் தான்...
’சித்தா’ படத்தை தொடர்ந்து இயக்குநர் எஸ்...